ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாகவே உள்ளோம்; அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது வழக்கமானதுதான்: செல்லூர் கே.ராஜூ கருத்து

மதுரை: அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் வழக்கம்தான். எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் பழனிசாமியை சந்திக்க வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கோச்சடை அருகேயுள்ள கொடிமங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில்கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசின் மீது … Read more

திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

அதிமுக பொருளாளர் , நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டு அவர் வனத்துறை அமைச்சராக இருந்தபோதும் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

அரியலூர் : அரியலூர் அருகே தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் திருமாறன் லாரி மோதி உயிரிழந்துள்ளார். தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற பொது பின்னால் வந்த லாரி மோதி மாணவன் உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த தந்தை சந்திரகாசனுக்கு அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    

கன்னியாகுமரி: நிறம் மாறிய அரபிக்கடல்… செத்து மிதக்கும் மீன்கள் – ஆய்வு செய்ய கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதி பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் நேற்று முன்தினம் முதல் திடீரென கரும்பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், இன்றும் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே … Read more

போலி ஆவணம் மூலம் மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடிக்கு ஊழல்! மருத்துவத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு!

மதுரை மண்டலத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகளை கடந்த 2017-2018 ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதி ஆக்கி அரசுக்கு 27 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பரசன், மதுரை மண்டல மருத்துவ நிர்வாக அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கிராமப்புற மருத்துவ சேவை கண்காணிப்பாளர் அசோக் மற்றும் அமர்நாத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு … Read more

கோவை: காட்டு யானையிடம் உயிர் தப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் – சி.சி.டி.வி வீடியோ

கோவை: காட்டு யானையிடம் உயிர் தப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் – சி.சி.டி.வி வீடியோ Source link

பாஜக எம்பி வீடு மீது தாக்குதல்.. 8 பேர் மீது வழக்குப் பதிவு..!

பாஜக எம்பி வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியின் பாஜக எம்பியாக இருப்பவர் அரவிந்த் தர்மபுரி. இவருடைய வீடு மீது மர்ம கும்பல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியைச் சேர்ந்த குண்டர்கள், சந்திரசேகர ராவ், … Read more

பாதுகாப்பு அறிவிப்புகளின்றி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள்… முன்னும் பின்னும் செல்லும் ரோடு ரோலரால் அச்சத்தில் மக்கள்..!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத் பேட்டையில் போதிய பாதுகாப்பு அறிவிப்புகளின்றி சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகள் சிலர் நெரிசலில் சிக்காமலிருக்க பணிகள் நடைபெறும் சாலையில் புகுந்து வருகின்றனர் . அப்போது ரோடு ரோலர் வாகனம் முன்னும் பின்னும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு பலகைகளை வைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும். Source link

மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரும் நாட்களில் அதிகமழை பெய்தாலும்கூட எவ்வித பாதிப்பும்இன்றி சீரான … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் மீதமுள்ள 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 பேயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை ஆகும். மீதமுள்ள மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.