அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியும் பணி நடக்கல… பெரியாறு ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா?.. கம்பம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

கம்பம்: கம்பம் அருகே சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் பெரியாறு ஆற்றின் கரை உடையும் அபாயத்தில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், ஆற்றின் கரையில் மண்அரிப்பு ஏற்பட்டபோதே விவசாயிகள் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தபோது, நிதி ஒதுக்கியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. எனவே உடையும் தருவாயில் உள்ள ஆற்றின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். … Read more

தேனி: ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக இருவர் கைது – 300 மூட்டை அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசியை வீடுகளில் பதுக்கி வைத்து லாரியில் கடத்த முயன்றதாக இருவர் கைது. 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேஷன் அரிசியை வருவாய் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக ரேசன் அரிசியை வீடுகளில் பதுக்கி வைத்து கடத்துவதாக பெரியகுளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப்பிற்கு ரகசிய புகார் வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், … Read more

ரேஷன் கடைகளில் கைரேகை பதிய வில்லையா? இனி கவலை வேண்டாம் – அமைச்சர் சக்கரபாணி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-  “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது ஆறாயிரத்து ஐநூறு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும் என்றும், குடும்ப அட்டைக்கு … Read more

தயாரா இருங்க.. மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தல்..!

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி … Read more

ரூ.1500 பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொலை.. ஓட்டுநர் கைது!

விருதுநகர் மாவட்டத்தில் 1,500 ரூபாய்  பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பட்டாம்புதூரைச் சேர்ந்த டிவி மெக்கானிக்கான சங்கரலிங்கம் என்பவரிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகன் என்பவர் தனது டிவியை பழுது பார்க்கும்படி 1,500 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் அதனை பழுது பார்க்காமல் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது டிவியை திரும்ப பெற்றுக்கொண்டவர், சங்கரலிங்கத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அதை தராமல் அவர் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அவரை … Read more

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாகவே உள்ளோம்; அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது வழக்கமானதுதான்: செல்லூர் கே.ராஜூ கருத்து

மதுரை: அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் வழக்கம்தான். எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் பழனிசாமியை சந்திக்க வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கோச்சடை அருகேயுள்ள கொடிமங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில்கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசின் மீது … Read more

திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

அதிமுக பொருளாளர் , நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டு அவர் வனத்துறை அமைச்சராக இருந்தபோதும் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

அரியலூர் : அரியலூர் அருகே தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் திருமாறன் லாரி மோதி உயிரிழந்துள்ளார். தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற பொது பின்னால் வந்த லாரி மோதி மாணவன் உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த தந்தை சந்திரகாசனுக்கு அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    

கன்னியாகுமரி: நிறம் மாறிய அரபிக்கடல்… செத்து மிதக்கும் மீன்கள் – ஆய்வு செய்ய கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதி பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் நேற்று முன்தினம் முதல் திடீரென கரும்பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், இன்றும் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே … Read more