கூட்டுறவுத்துறை செயல்பாடு எப்படி?; அமைச்சர்கள் ஐ.பெரியசாமி Vs பிடிஆர் இடையே கருத்து மோதல்?
கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் நிதியமைச்சராக தனக்கு திருப்தியில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவில் கூட்டறவுத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசியிருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறையில் விரைவில் … Read more