வீட்டு கொட்டாயில் தங்கியுள்ள முதியவருக்கு உணவு தர மறுத்ததோடு, கம்பால் அடித்து துன்புறுத்தும் உறவுக்கார..!

செங்கல்பட்டு அருகே வீட்டு கொட்டகையில் தங்கியிருந்த உறவுக்கார முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  குப்பன் என்பவரின் வீட்டு கொட்டாயில்   உறவுக்காரரான  80 வயதாகும் சொக்கலிங்கம் தங்கியுள்ளார். கவனிக்க யாருமில்லாத அவரை, குப்பனும் அவரது மகள் சிவகாமி மற்றும் பேரன் சூரியாவும் உணவு தரமறுத்ததோடு,குச்சி மற்றும் கம்பால் அடித்துள்ளனர்.  இதில் காயமடைந்த சொக்கலிங்கம் காயங்களுடன் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து விசாரணை நடத்தி சூர்யாவை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் எழுதவில்லை. தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (நவ.19) நடைபெற்றது. காலை 9.30 முதல் … Read more

Varisu: வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி.. கொளுத்திப்போடும் மாஜி அமைச்சர்..

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொங்கலுக்கு சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக இருப்பதால் விஜய் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதேநாளில் அஜித்தின் … Read more

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் 22ம் தேதி தெப்ப விழா

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சிவப் பெருமான் நடனமாடிய ஐம்பெரும் சபைகளில் ரத்தினசபையாக சிறந்து விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  உற்சவர் தீர்த்த குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  காட்சி தரும் நிகழ்ச்சி நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக  தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், … Read more

மனம் திருந்தி வாழ நினைத்த பெண் மாவோயிஸ்டுக்கு மறுவாழ்வு அளித்த தமிழக அரசு!

மனம் திருந்தி வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியாவிற்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளது தமிழக அரசு. கடந்த 18.12.2021 அன்று திருப்புத்தூர் மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்த, கர்நாடகாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா(40) என்பவர், மனம் திருந்தியதால் அவர் அரியூர் ஸ்ரீசாய் வசந்தம் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளித்து வரப்பட்டது. இந்த நிலையில் அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு ”சரணடைதல் மற்றும் மறுவாழ்வு” திட்டத்தின் கீழ் அரியூர் … Read more

13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு; காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மோடி வெளியீடு

13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு; காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மோடி வெளியீடு Source link

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.! போக்சோவில் கைது.!

வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் பிரதீப்(22), பதினாறு வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை … Read more

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

கதிர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, அப்பாசுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’, ‘பூவேலி’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’, ‘மலபார் போலீஸ்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன. காதல் தேசம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பிரேம தேசம் என்ற பெயரில் வெளியானது. … Read more

சென்னை தொழிலதிபர் மீதான ரூ.17 கோடி மோசடி புகார்: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையினருக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்த சென்னை தொழிலதிபர் ராஜேஷுக்கு எதிரான 17 கோடி ரூபாய் மோசடி புகாரை விசாரிக்க சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று, சிறைப்படுத்தி, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் … Read more

கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். … Read more