கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!
பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். … Read more