மாணவி பிரியா வழக்கு | தலைமறைவாக உள்ள மருத்துவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களையும் கைது செய்ய மூன்று தனிப்படை அமைத்துள்ளது காவல்துறை. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா (17), ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்த பிரியாவுக்கு, பெரியார் நகரில் உள்ள அரசு … Read more

ஒற்றை காட்டு யானையிடம் சிக்கிய நபர்: தப்பித்தது எப்படி?

ஒற்றை காட்டு யானை ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்க வந்த காட்சி வெளியாகியுள்ளது. கோவை துடியலூரை அடுத்த வரப்பாளையம் பொண்ணூத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. கேரளா ஒட்டியுள்ள வனப் பகுதியில் நாள்தோறும் தண்ணீர், உணவு தேடி வரும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் வரப்பாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. யானைகள் ஊருக்கு புகுந்ததை கேள்விப்பட்ட விவசாயி ஓய்வு பெற்ற ஆசிரியர் … Read more

நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல்: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் மூடல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளை இன்று ஒருநாள் மூட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரா தேவி ஆணையிட்டுள்ளார். நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக வருவோம்: ஆசைப்பட்ட மாணவிகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர்

காவல்துறை அதிகாரியாக வருவேன் என விருப்பம் தெரிவித்த அரசுப் பள்ளி மாணவிகளை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் அமர வைத்து கௌரவித்த சம்பவம் மாணவிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. உலக பெண்கள் குற்றத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 50 பேர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்ளவும் ஆலோசனைகள் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (19.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 19/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG மகாராஷ்டிரா வெங்காயம் 38/36/34 ஆந்திரா வெங்காயம்18/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/10 உருளை 30/26/23 சின்ன வெங்காயம் 90/80/60 ஊட்டி கேரட் 60/50/40 பெங்களூர் கேரட் 30 பீன்ஸ் 20/18 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 10/8 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 30/25 உஜாலா … Read more

இன்று நடைபெறவிருந்த வங்கிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்..!!

இன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் முடிவு செய்திருந்தது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் பொது செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவிக்கையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்கள் என்பதை பார்த்து, அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் காரணமாக அனைத்து வங்கி கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு சில … Read more

புடிச்சான் பாரு எக்ஸ்..! குறும்படம் பெரும் படமாகி வசூல் ரூ.45 கோடிப்பே..! வெற்றியின் ரகசியம் இதுதான்..!

கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் 14 நாட்களில் 45 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறும்படத்தை பெறும் படமாக்கி குடும்பத்தோடு ரசிக்க செய்த இயக்குனரின் தன்னம்பிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனாராக இருந்ததில்லை…! சினிமா பின்புலம் சுத்தமாக இல்லை…! பணம் போட்டு பணம் எடுக்க போதிய வசதியும் இல்லை…! அப்படி இருந்தும் அவர் எடுத்த முதல் … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார்சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்தஜமேஷா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரத்யேமாக முதல் தகவல் அறிக்கையும் … Read more

தேசிய அளவிலான தடகள போட்டி: தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

அசாம் மாநிலம் கௌஹாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரருக்கு பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அசாம் மாநிலம் கௌஹாத்தில் 37-வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அசாம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது … Read more