பிரியா மரணம் | மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் … Read more

ஓபிஎஸ்சுக்கு செம சான்ஸ்; கைக்கு வருகிறது அதிமுக!

அதிமுக தலைமை பதவியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோரிடையே நேரடி மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரது ஆதரவாளர்களும் அணி திரட்டிக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். இந்த மோதலுக்கு மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி நீதி வழங்குமாறு முறையிட்டார். வழக்கு விசாரிக்கப்பட்டு, முடிவில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. … Read more

ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு  சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கடந்த 7ஆம் தேதி டெண்டர் கோரியிருந்தார். இந்த டெண்டரில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும், ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகள் தனிச்சையானவை என்று கூறி, இந்த டெண்டரை … Read more

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி

செய்துங்கநல்லூர்: வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. தென்மாவட்டங்களில் முக்கிய சந்திப்பாக திகழும் நெல்லையையும், துறைமுக நகரமான தூத்துக்குடியையும்  இணைக்கும் வகையில் நெல்லை – தூத்துக்குடி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லையையும், தூத்துக்குடியையும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது. 2012ம் ஆண்டு இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும்,  … Read more

மீனம்பாக்கம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதைக்கு முன்னுரிமை: போக்குவரத்து ஆணையம் ஒப்புதல்

மீனம்பாக்கம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதைக்கு முன்னுரிமை: போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் Source link

இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கு அடுத்த மூன்று … Read more

வேதனை.. பெட்டி பெட்டியாக தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்..!

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது. கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் … Read more

ஓபிஎஸ் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்: பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு

புதுடெல்லி: கட்சி அலுவலகத்தை சூறையாடிய ஓ.பன்னீர்செல்வம் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, ஓ.பன்னீர்செல்லம் தாக்கல் … Read more

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு? அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய … Read more

காவல் துறைக்கு சுதந்திரம் கொடுங்கள் – அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக்கேடானதாகும். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் … Read more