பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடத்துவோம் – டாக்டர்கள் சங்கம்

சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; “சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் … Read more

ஒரே நாளில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.700 விலை உயர்வு: பனிக்காலம் துவங்கியதால் பூக்களின் வரத்து குறைந்தது

ஈரோடு : சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ரூ.1575-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாப்பாளையம், பவானிசாகர் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலம் முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு … Read more

’’பிணத்தைக் காணோம்’’ – போலீசாரை அழைத்து களேபரத்தை ஏற்படுத்திய பிரபல விடுதி நிர்வாகம்

காரைக்காலில் உள்ள பிரபலமான தங்கும் விடுதியில் ஓருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு அதன் நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி தங்கியுள்ளார். அப்போதே அறையிலுள்ள கழிவறை கதவு சரியாக இயங்காதது குறித்து விடுதி … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு 1.3 லட்சம் பேர் ஆப்சென்ட் .!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது. இதில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவை அடங்கும். இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 … Read more

காஷ்மீரில் சோகம்.. பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவும், பனிச் சரிவும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று, கட்டுபாட்டுக் கோடு பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். அதில் 3 வீரர்கள் சம்பவ … Read more

பிரியா மரணம் | மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் … Read more

ஓபிஎஸ்சுக்கு செம சான்ஸ்; கைக்கு வருகிறது அதிமுக!

அதிமுக தலைமை பதவியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோரிடையே நேரடி மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரது ஆதரவாளர்களும் அணி திரட்டிக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். இந்த மோதலுக்கு மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி நீதி வழங்குமாறு முறையிட்டார். வழக்கு விசாரிக்கப்பட்டு, முடிவில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. … Read more

ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு  சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கடந்த 7ஆம் தேதி டெண்டர் கோரியிருந்தார். இந்த டெண்டரில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும், ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகள் தனிச்சையானவை என்று கூறி, இந்த டெண்டரை … Read more

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி

செய்துங்கநல்லூர்: வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. தென்மாவட்டங்களில் முக்கிய சந்திப்பாக திகழும் நெல்லையையும், துறைமுக நகரமான தூத்துக்குடியையும்  இணைக்கும் வகையில் நெல்லை – தூத்துக்குடி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லையையும், தூத்துக்குடியையும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது. 2012ம் ஆண்டு இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும்,  … Read more