2023ல் எத்தனை நாள்கள் பொது விடுமுறை?… அரசு வெளியிட்ட பட்டியல்

தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்: நியாயமான முடிவு எடுக்கப்படும்.! சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: வரும் 17ம்தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் பிரிந்து, தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இபிஎஸ், அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி, ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். மேலும் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு அளித்துள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ், தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறி … Read more

3 நாட்களில் சிங்கார சென்னை 2.0 – மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா அப்டேட்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மூலம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாத கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் … Read more

கணவர் மீது நடிகை திவ்யா புகார் : நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு

கணவர் மீது நடிகை திவ்யா புகார் : நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு Source link

#Breaking : சிறையில் இருக்கும் பனங்காட்டுப்படை கட்சி ராக்கெட் ராஜாவுக்கு அடுத்த ஆப்பு.! 

சிறையில் இருக்கும் பனங்காட்டுப்படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவாகியது. இதனை தொடர்ந்து பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் சமீபத்தில் கைதானார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் … Read more

''தமிழ் தெரியாத அதிகாரி நியமனத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு'' – போராட்டம் நடத்திய என்எல்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி: தொழிலாளர் உதவி ஆணையராக தமிழ் பேசுபவரை நியமிக்கக்கோரி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தினார். சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கையை நிறைவேற்றாததால் ஆர்ப்பாட்டமும் நடந்தது. நெய்வேலி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை, அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் … Read more

2023ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2023ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்: 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது … Read more

ஊட்டியில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

ஊட்டி: ஊட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கும் பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் 6 தாலுகாக்களிலும் நீர்நிலை புறம்நோக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பிற வருவாய் துறை சார்ந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் அவையும் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது. … Read more

”கோலி, ரோகித்தை திட்டியதால் என் நண்பனை கொலை செய்தேன்”.. இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை திட்டியதால் அரிவாளால் வெட்டி இளைஞரை கொலை செய்ததாக அவரது நண்பர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், இன்று காலை அக்கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் நேற்று காலை நண்பர்கள் பிரபாகரன் மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார். … Read more