“மதம் பற்றிய அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கின்றனர்” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மதுரை: “தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன” என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”சுத்தம் சோறு போடும் என்பதற்கேற்ப ஒவ்வொரு இடத்திலும் தூய்மை முக்கியம். தூய்மை நகரம், மாநிலம் குறித்து வரிசை பட்டியலை மத்திய அரசு தயாரித்தது. தமிழகம் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு வகையில் முதல் நிலையில் இருந்தாலும், 2022-ம் ஆண்டுக்கான தூய்மை பட்டியலில் இடம் பெறவில்லை. பின்தங்கிய … Read more

ராஜராஜசோழன் இந்துவா? இயக்குனர்கள் மீது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டம்!

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்; மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் இயக்கத்தை உருவாக்கி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். மேலும், மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நவம்பர்-1 தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி … Read more

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் மழை பெய்தால், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு மழைக் காலத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஜிஎஸ்டி … Read more

"பசி, பட்டியோடு இருக்கோம் காப்பாத்துங்க" – வேலைக்காக குவைத் சென்றவர்களின் அதிர்ச்சி வீடியோ

குவைத் நாட்டிற்கு சென்ற அரியலூரைச் சேர்ந்த 3 பேருக்கு அங்கு வேலை கொடுக்காமல் அறையில் அடைத்துவைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலையரசன், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன் , நல்லநாயக்கபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஆர்.கே டிராவல்ஸ் கருணாநிதி என்பவர் மூலம் இவர்கள் மூவரும் குவைத்தில் கம்பிகட்டு வேலைக்கு 24 மாதம் வேலை என கூறியதின் பேரில் கடந்த … Read more

ஆம்னி பஸ் கட்டண உயர்வா? புகாரளிக்க எண்ணை அறிவித்த அரசு.! 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் இப்போதே புக் செய்ய துவங்கிய நிலையில், கட்டண உயர்வு குறித்து புகாரளிக்க அரசு அவசர எண்ணை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இந்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர்.  முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் … Read more

எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் கடிதங்கள் பரீசிலனையில் உள்ளது – சபாநாயகர் அப்பாவு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் … Read more

120 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவி மீட்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவியை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கிரே நகரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, 10 அடிக்கும் மேல் நீர் நிரம்பியுள்ளது. இதனைக் கண்ட மோகன்ராஜின் 15 வயது மகள், மோட்டார் போடுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது, வழுக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் மகளை காணாததால், கிணற்றின் அருகில் தேடியபோது உயிருக்கு … Read more

அதிமுகவின் 51-ம் ஆண்டு தொடக்க விழா: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் 51-வது தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவின் … Read more

மாட்டு இறைச்சி கிடைப்பதில் சிக்கல்; பாஜ மீது பழிபோடும் செ.கு.தமிழரசன்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் மிகவும் செல்வாக்குடன் வலம் வந்தவர்களில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற கூட்டணி கட்சி தலைவர்களில் முக்கியமானவரும் செ.கு.தமிழரசன் தான். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில், கீழ் வைத்தியனான்குப்பம் (கேவி குப்பம்) தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செ.கு.தமிழரசனுக்கு தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் பதவியை வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார். … Read more