குளிரப்போகுது சென்னை புறநகர் ரயில்கள்..!

புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து சென்னையிலும் குளிர்சாதன பெட்டி மின்சார ரயில்களை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. முதல் கட்டமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிர்சாதன பெட்டி வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி. பெட்டிகள் அறிமுகம் செய்யும் போது அதற்கான … Read more

வ.உ.சி மைதான கழிவறையில் சிதறிக்கிடக்கும் ஊக்க மருந்து ஊசிகள், கவர்கள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதான கழிவறையில், பயன்படுத்தப்பட்ட ஊக்க மருந்து ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில், நேற்று முதல் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில்,மைதானத்தின் கழிவறையில், ஊக்க மருந்து ஊசிகளும், கவர்களும் சிதறிக்கிடக்கின்றன. Source link

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்க மோடி அரசு தயாராக இல்லை: முத்தரசன்

விருதுநகர்: பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்க மோடி அரசு தயாராக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கூறினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடை பயண இயக்கம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இன்று இக்குழுவினர் விருதுநகர் வந்தடைந்தனர். அவர்களோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசனும் பங்கேற்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி … Read more

வாடகை தாய் முறை தமிழ் கலாச்சாரமா? அன்புமணி பதில்..!

விழுப்புரம் மாவட்டம், கொல்லியங்குணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது; தமிழகத்தில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வி வளர்ச்சியில் கடைசி 2 இடங்களில் உள்ள மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்று. விழுப்புரத்தில் போதிய சுகாதார வசதிகள் இல்லை. ஆனால், டாஸ்மாக் விற்பனையில் தமிழகத்தில் விழுப்புரம் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், இந்த மாவட்டம் வளர்ச்சி பெற … Read more

ஊட்டியில் குளுகுளு காலநிலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் வாரம் வரை கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், மழை குறைந்த நிலையில் கணிசமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றுலா … Read more

கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமக்கு சொந்தமான ‘எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி’யில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவரது முன்னிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணைப்பு பற்றிய அறிவிப்பும் இம்மைதான திறப்பு விழாவில் வெளியானது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் … Read more

சென்னை ஐ.ஐ.டி.,யில் வங்கி சார்ந்த படிப்புகள் அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை ஐ.ஐ.டி.,யில் வங்கி சார்ந்த படிப்புகள் அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி? Source link

முத்துராமலிங்க தேவர் குருபூஜை கொண்டாடுபவர்களுக்கு.. வெளியானது முக்கிய அறிவிப்பு.! 

ஒவ்வொரு வருடமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடத்தில் குருபூஜை விழா நடைபெறும்.  ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும் கொண்டவராக முத்துராமலிங்க தேவர் விளங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அவர் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். சுபாஷ் சந்திரபோசுடன் சேர்ந்து நாட்டின் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார்.  ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் உள்ளிட்டவற்றால் முத்துராமலிங்க தேவர் பல இன்னல்களை சந்தித்தவர். அவர் அக்டோபர் 10 … Read more

தயாரிப்பில் இறங்குகிறார் 'தல'.. முதல் படத்தில் நடிக்கிறார் 'தளபதி'..?

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் விஜய் நடிக்க அதிக வாய்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள எம்.எஸ்.தோனி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களை  தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி … Read more

தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான்: தமிழக பாஜக

சென்னை: “இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை … Read more