மக்களே, மறந்தும் இதை செஞ்சுடாதீங்க.. அப்புறம் அபராதம் கட்டணும்..!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால், குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, … Read more

'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' – 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது

சென்னை: தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், முதல் 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலர் கைது … Read more

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பு; இந்தியை நிராகரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான … Read more

பட்டுபோன மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

காங்கயம்: காங்கயம் அருகே சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம்- தாராபுரம் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான டூவீலர், கார்கள், கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் என எராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் காங்கயம்-தாராபுரம் சாலை, நாகரசு நல்லூர் பிரிவு அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு பட்டுப்போன … Read more

வாணியம்பாடி: அணையில் குளிக்கச் சென்ற பள்ளி உதவியாளர் மற்றும் மாணவன் நீரில் மூழ்கி பலி

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் மற்றும் பள்ளி உதவியாளர் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ் அஹமத் (45), உஜேர் பாஷா ((17), உவேஸ் அஹமத்(16), ராகில் பயஸ்(22) ஆகிய 4 பேர் ஆந்திர மாநிலம் தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் உள்ள கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் … Read more

 Bigg Boss Tamil Season 6 Live : என்னை ஒரு முஸ்லிமாக இல்லாமல் தமிழனாக காட்ட விரும்புகிறேன் – நடிகர் அசீம்

 Bigg Boss Tamil Season 6 Live : என்னை ஒரு முஸ்லிமாக இல்லாமல் தமிழனாக காட்ட விரும்புகிறேன் – நடிகர் அசீம் Source link

குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! கொட்டுவதை வீடியோ எடுத்து கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு! – வேலூர் மாநகராட்சி!

தரம் பிரிக்காமல் தந்தால் ரூ.100! வணிக நிறுவனங்களுக்கு ரூ.500! வணிக வளாகங்களுக்கு ரூ.1000! வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டு விட்டது. குப்பைகளை சாலைகளில் கொட்டுவது, காலியிடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி திடக்கழிவு … Read more

பாஜக கீழ்த்தரமாக இறங்கும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும் பாஜகவினர் செல்வார்கள் என, திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும், பாஜகவினர் செல்வார்கள். அதை மறந்து விடாதீர்கள். தங்களது சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நம்மைப் பற்றி அவதூறுகள் … Read more

நெருங்கும் தீபாவளி.. ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், விடுமுறை தினமானஇன்று, சேலத்திலுள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடை வாங்க கூட்டம் அலைமோதியது. சேலம் டவுன் மற்றும் சின்ன கடை வீதி, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலுள்ள துணிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சேலம் நான்கு ரோடு மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அதிகம் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Source link

காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். உடன் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர்.

திருப்பூர்: நாட்டின் நிதியமைச்சர் மயிலாப்பூருக்குச் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்டால் விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார். திருப்பூர் மாவட்டம் வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக … Read more