திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அமைந்தகரை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் திமுக பொதுக்குழுவில் பங்கேற்பு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு திமுக தலைவராக மீண்டும் தேர்வான மு.க.ஸ்டாலின், மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை திமுக பொதுச்செயலாளராக … Read more

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக பிரதீப் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பிரதீப் பொறுப்பேற்றார். செங்கல்பட்டு மாவட்டம், கடந்த 2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங் ஆகியோர் எஸ்.பி.யாக பணியாற்றினர். இந்நிலையில் உயர் படிப்புக்காக சுகுணா சிங் வெளிநாடு சென்றதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு … Read more

திமுக துணை பொதுச் செயலாளரானார் கனிமொழி!

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர், தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் … Read more

கோவில்பட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலாயுதபுரம் சாலையில் வாகன சோதனையின்போது தடை செய்யப்பட்ட 12 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

`பதிலுக்கு பதில் பேசாமல், அன்பால் திமுக அவப்பிரச்சாரத்தை முறியடிப்பதே என் பணி’- அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், `’என்றார். தனது பேட்டியில் அவர் பின்வரும் கருத்துகளையும் கூறியுள்ளார். “உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம், இந்து மதம்! சொல்லப்போனால் இந்து என்பது மதமல்ல; வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர். ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் இன்று பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை ராஜராஜசோழன் … Read more

#சென்னை | அரசு மருத்துவமனையில் பேரவலம்! சிறுவனின் குடலை வெளியே எடுத்து போட்டுவிட்டு தூங்கிய மருத்துவர்! பலியான சிறுவன்! 

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 வயது  ஹரி கிருஷ்ணன் என்கிற சிறுவனுக்கு குடல் அறுவை சிகிச்சையில், பாதுகாப்பற்ற முறையில் குடலை வைத்தது மட்டுமில்லாமல், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தூங்கியதால் சிறுவன் பலியாகியதாக தாய் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையிலும், காணொளியில் அடிப்படையிலும் கீழ் காணும் செய்தி சொல்லப்படுகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவன் ஹரி கிருஷ்ணனுக்கு வயிற்றுவலி காரணமாக குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குடலை பாதுகாப்பாக வைக்க … Read more

தெருவோர கடையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலையோர கடைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறி வாங்கி மக்களிடம் கலந்துரையாடினார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார். அவர் சாலையோர கடைகளில் கீரை மற்றும் காய்கறியை வாங்கினார். அப்போது காய்கறி விற்பனை பெண் திடீரென நிர்மலா சீத்தாராமன் காலில் விழுந்தார். உடனே அவர் … Read more

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு; துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (அக்.9) நடைபெற்றது. இதில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 … Read more

எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.. 2047ல் இந்தியா தான் எல்லாமே.. ஆர்.என். ரவி அதிரடி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் முடித்த 567 மாணவ, மாணவியர்க்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “மாணவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதான் இந்த பட்டம். கற்றலுக்கு அளவே கிடையாது. வாழ்நாள் முழுவதும் கற்றலை கைவிடக்கூடாது. படித்து முடித்த உங்களுக்கு முன்னால் பல சவால்கள் காத்திருக்கிறது. அதை … Read more