தனியார் அருங்காட்சியகத்தில் 2 சோழர் கால சிலைகள் பறிமுதல்
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல், பழங்கால சிலைகள் இருப்பதாக தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில், டிஎஸ்பி-க்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. … Read more