பிரபல வீராங்கனை திடீர் மரணம்.. சர்வதேச வீரர்கள் இரங்கல்..!

புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30. சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஹோப் டவுன்ஷிப் பகுதியில் பிறந்தவர் சாரா லீ. இளம் வயதிலிருந்தே வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றார். கடந்த 2015-ம் ஆண்டு, டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) நடத்திய ‘டஃப் இன்ஃப்’ … Read more

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழக்க காரணமான காப்பகம் மூடல்

திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்த சேவாலய காப்பகம் வருவாய்த் துறை முன்னிலையில் இன்று மூடப்பட்டது. திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர் . 6-ம் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மாணவர்கள் … Read more

வளர்ப்பு நாய் கொலை: ஹெச்.ராஜா மீது பாய்ந்த நடவடிக்கை!

பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவ்வப்பொது ஏதாவது கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை கொன்றது பற்றி பதிவிட்டிருந்தார். அதில், “எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு … Read more

வேலூர் வந்தடைந்த உலகின் மிக உயரமான பஞ்சலோக நடராஜர் சிலை; பக்தர்கள் ஆரவாரம்!

உலகிலேயே மிகவும் உயரமான, 23 அடி உயரம் மற்றும் 17 அடி அகலமும் கொண்ட, 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரூ.4 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை அரியூர் தங்ககோவில் வளாகத்தை வந்தடைந்தது. உயரமான பஞ்சலோக நடராஜர் சிலைக்கு பக்தர்கள் வழிநெடுங்கிலும் மலர் தூவி மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வேலூர் மாவட்டம் அரியூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் பஞ்சலோகத்தால் 23 அடி உயரம் … Read more

மதுஅருந்திவிட்டு பணி செய்தால்.. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது போக்குவரத்துத் துறை சார்பாக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றனர். அதில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் வருகிறது. எனவே மது அருந்திய நிலையில், பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. எனவே ஓட்டுநர்கள் மற்றும் … Read more

பயிர் காப்பீட்டில் இணைய காலக்கெடு முடிய இரண்டு நாட்களே உள்ளது!

புதுப்பிக்கப்பட்ட பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டம்!   தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது 2022 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பருவ காப்பீடு பெறப்பட்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வேளாண் நிலையான உற்பத்தியில் இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி வழங்குதல், பண்ணை வருவாயை நிலை நிறுத்துவது மற்றும் … Read more

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள சக்கிமங்கலம் சௌராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் ஆதிசேஷன் (14). இவர் சக்கிமங்கலம் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (8). இவர், கருப்பாயூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுவர்கள் ஆதிசேஷன், ஹேமன் ஆகியோர் நேற்று சக்கிமங்கலத்தில் உள்ள இளம்பள்ளி கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர். அவா்கள் … Read more

கூலிப்படையை ஏவி தச்சுத்தொழிலாளியை கடத்தியதாக வி.சி.க. மகளிர் அணி துணைத்தலைவி கைது..

கடன் தொகையை வாங்குவதற்காக, கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ஞானமணியை, சில நாள்களுக்கு முன்பு சிலர் கடத்தி சென்று, பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது . புகாரின்பேரில் தமிழ் அழகன், வேல்மணியை கைது செய்து போலீசார் விசாரித்ததில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஞானமணி ஒன்றரை லட்சம் ரூபாய் … Read more

சென்னையில் இறுதிக் கட்டத்தில் மழை நீர் வடிகால் பணி: முதல்வர் நேரில் ஆய்வு 

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி … Read more