தேவரியம்பாக்கம் காஸ் கிடங்கு விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள காஸ் கிடங்கில் பெரிய சிலிண்டர் ஒன்றை இறக்கும்போது அதில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆமோத்குமார், தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த காஸ் கிடங்கு உரிமையாளர் ஜீவானந்தம், … Read more

'கேமரா இருக்கு ஜாக்கிரதையா இருங்க' அமைச்சர் செஞ்சி மஸ்தான் அட்வைஸ்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:- “தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஆங்காங்கே தங்களது பேச்சால் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகின்றனர். அதை மேற்குறி காட்டி அமைச்சர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இல்லை ஊராட்சி மன்ற தலைவர்களும் … Read more

கொள்ளிடம் ஆற்றில் நீரில் 6 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

திருச்சி: தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர். பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.8.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் – உகண்டா நாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8.3 கோடி மதிப்புள்ள போதை பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பயணம் செய்து உகாண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலின் … Read more

ரேஷன் கடை பணியாளர் நியமனம்.. பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்..!

கூட்டுறவுத் துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அடுத்த வாரத்தில் இருந்து அறிவிப்பாணைகள் வெளியிடப்பட உள்ளன. வரும் டிசம்பருக்குள் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவராக உள்ள அரசியல் கட்சியினர், ரேஷன் கடைகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் … Read more

7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்: தோக்கமூரில் வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர். போலீஸார் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் அடுத்துள்ளது தோக்கமூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தோக்கமூர், எல்.ஆர்.மேடு, எடகண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், தோக்கமூர் பகுதியில் நூறு பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களில் … Read more

பெரம்பலூர்: ஆள்கடத்தலில் ஈடுபட்ட நபர் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 23 நபர்களிடம் 1 கோடியே 83 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (40) என்பவரை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது உறவினர் ஒருவர் காவல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் ரோஸ் நகரைச் சேர்ந்த மோகன்பாபு (25)என்பவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது கடந்த 29 ஆம் தேதி பிரகாஷை சென்னை … Read more

ஜம்மு காஷ்மீர் டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை.. வீட்டுப் பணியாளர் தலைமறைவு

ஜம்மு காஷ்மீர் டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை.. வீட்டுப் பணியாளர் தலைமறைவு Source link

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது இவர்களுக்கு பொருந்தாது..!!

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ தொடரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. Source link