பயண நேரத்தை குறைத்து நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும்: தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் –  பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென் மாவட்ட மக்கள் பயன்படும் விதத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலிருந்து  திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு  வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி,  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி,  கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் … Read more

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் 2-ம் கட்ட அகழாய்வு நிறைவு

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வந்த 2-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ராஜேந்திர சோழன், மாளிகைமேடு பகுதியில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அவரது ஆட்சிக்குப் பின்னர், அந்த மாளிகைமேடு மண்மேடுகளால் மூடப்பட்டு, காணாமல் போனது. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1986-1996 வரை 4 கட்டங்களாக இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில், மாளிகையின் … Read more

அனைவருக்கும் மீண்டும் பென்சன்; அமைச்சர் ஹேப்பி தகவல்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும் வளைகாப்பு பொருட்களும் வழங்கினார். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை … Read more

தமிழகத்தில் பெருகிவரும் கோச்சிங் சென்டர்கள்: தமிழக அரசு முறைப்படுத்த கோரிக்கை

பழநி: தமிழகத்தில் அரசு பணிகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், காவலர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ படிப்பிற்கு நீட் போன்றவை மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலமே தேர்வு செய்யப்படுகிறது. இத்தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கோச்சிங் சென்டர்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பல தகுதியானவையாக இல்லையென்றும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை பிடுங்கி விடுவதாகவும், தற்போது புகார்கள் வருகின்றன. … Read more

தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்குப் புறப்பட்ட மக்கள்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகளால் நெரிசல்

சேலம் / ஈரோடு: பல்வேறு நகரங்களில் பணியாற்று பவர்கள், ஆயுத பூஜை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை ஒட்டி, தங்கள் சொந்தஊருக்கு புறப்பட்டுச் சென்றதால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் நெரிசல் அதிகரித்தது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. இதேபோல தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் 9-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில்பணியாற்றுபவர்கள், மாணவர்கள்உள்ளிட்டோரில் பெரும்பாலானோர் நேற்றே சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதன் காரணமாக, … Read more

நீட் தேர்வு குளறுபடி – மாணவிக்கு அசல் விடைத்தாளை காட்ட உத்தரவு!

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் செப்டம்பர் 7ஆம் … Read more

செயலில் கவனம் தேவை… நடவடிக்கைக்கு தயங்கமாட்டேன் – ஸ்டாலின் எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் … Read more

ஒரகடம் அருகே தெரியம்பாக்கத்தில் கிடங்கில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தெரியம்பாக்கத்தில் கிடங்கில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலை மற்றும் உணவகங்களுக்கு தேவையான ராட்சத கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதில் வடமாநிலங்களை … Read more

கமுதி | செங்கப்படையில் விளை நிலங்கள் வழியாக தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள்

கமுதி: கமுதி அருகே விவசாய நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் வயல்வெளிகளில் கைக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர்கள், அறுவடை காலங்களில் நெல் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை. விவசாயப் பணிகள் பாதிக்கின்றன. பலத்த … Read more