கம்யூனிஸ்ட் மாநாடு: ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ளதாகூர் தியேட்டரில் நேற்று தொடங்கியது. அக்.3 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பினராயிவிஜயனும் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்றுகாலை 11.30 மணிக்கு முதல்வர் … Read more

இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில், தானாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளை பின்பற்றி இயங்குகிறதா? என்பது … Read more

மின் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் மின்தடையால் இருளில் மூழ்கியது புதுச்சேரி: பொதுமக்கள் கடும் அவதி சாலை மறியலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயமாக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள், தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவினர் கடந்த 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் ஸ்டிரைக் … Read more

மின்தடை – நள்ளிரவு பொதுமக்கள் சாலை மறியல்!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடர் மின் தடை காரணமாக நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர் மின் தடை நிலவி வருகிறது. புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு … Read more

அரிசி கடத்தல் | உடந்தையாகும் அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை – முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், “நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 35,595 நியாய விலைக் கடைகளும், மதுரை … Read more

மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனே வழங்குக! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

வெளி நாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்து விட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சியை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய மக்களின் நலனை … Read more

வேலூரில் மீண்டும் பரபரப்பு; சாலையோரம் பறக்கவிடப்பட்ட ரூ.14 லட்சம் கள்ள நோட்டுகள் போட்டிப்போட்டு சேகரித்த மக்கள்; போலீஸ் கைப்பற்றியது

வேலூர்: வேலூர் அடுத்த  பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையோரம் கார் ஒன்றில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் ரூ.14.70 கோடி நோட்டு கட்டுகள் கொண்ட 30 பண்டல்களை லாரியில் ஏற்றியபோது பிடிபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒருவர் திடீரென 500 ரூபாய் நோட்டு கட்டுகளை சர்வீஸ் சாலையோரம் … Read more

ஸ்ரீரங்கத்தில் கடத்தப்பட்ட குழந்தை சமயபுரத்தில் மீட்பு – சிசிடிவியில் சிக்கிய பெண் யார்?

ஸ்ரீரங்கத்தில் 3 வயது குழந்தையை கடத்திய பெண்ணிடமிருந்து 24 மணி நேரத்தில் போலீஸார் மீட்டுள்ளனர்.  திருச்சி ஸ்ரீரங்கம் இ.பி ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், முருகன் வேறொரு திருமணம் செய்து கொண்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். முருகனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த 3 வயதேயான ராகவன், அவனது பாட்டி சம்பூர்ணம் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே … Read more

அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள தாகூர் தியேட்டரில் நடந்தது. இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், “அண்மைக் காலமாக, கேரளத்தில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் மாநாடுகளுக்கும் என்னை அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் போலவே, நானும் மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறேன். மாநில எல்லைகளால் நாம் பிரிந்திருக்கிறோம். எனினும், … Read more

ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில், தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை கைப்பற்ற – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு வழியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனினும் இதை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்து வருகிறார். ஒரு பக்கம், எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதுவரை … Read more