விவசாயத்தில் நஷ்டம்.! வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (37). இவர் உடும்பன் சோலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்தை குத்தகை எடுத்து ஸ்ரீகாந்த் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த ஸ்ரீகாந்த் பூச்சி … Read more

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்: செருப்பு மாலை அணிவித்த பெற்றோர்..!

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அடித்து உதைத்து, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து பெற்றோர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல்ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். … Read more

600 பேருக்கு டெங்கு | வீடுகளுக்கே ஆய்வு செய்ய வரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள்

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 224 மருந்து தெளிப்பான்கள், … Read more

வைத்திலிங்கம் ஒரே போடு; பீதியில் எடப்பாடி பழனிச்சாமி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் இலைமறை காயாக இருந்து வந்த தலைமை பதவிக்கான கோஷ்டி பூசல் ஆட்சியை இழந்த பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டே நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பாஜக மேலிடம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் என ஒரே நேரத்தில் 3 கதவுகளை … Read more

விலை மதிப்பற்ற உயிர்கள்… முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் செய்தி

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு … Read more

ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலி

ஈரோடு: ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

அரசியலில் நாங்கள் ஜீரோ என்றனர்; இனி நாங்கள்தான் ஹீரோ – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

அரசியலில் எங்களை ஜீரோ என விமர்சித்தனர்; ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது … Read more

வாரிசு சான்றிதழ் பெற புதிய நெறிமுறை.. வெளியிட்டது தமிழக அரசு..!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “வாரிசு சான்றிதழ் பெற விரும்புவோர், இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். அதை சாதி, மதம் பார்க்காமல், எந்தவித தடையும் … Read more

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்றாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்மையில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையிலான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 1.11 லட்சம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1.11 லட்சம் குழந்தைகளில் 43 ஆயிரம் பேருக்கு இதய கோளாறு, சிறுநீர் கழிக்கும் … Read more

பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு என்ன?

அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரண இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை சேர்த்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு ஓபிஎஸ் தரப்போ, தரப்பு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். எனவே தேர்தல் நடத்த … Read more