விபத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்
விபத்தால் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் – நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்கா பிரசாந்த் (13). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை (25.09.2022) மாலை பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் … Read more