சென்னை குடிநீர் வாரிய குழாய் இணைப்பு பணி: 8 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதானகுடிநீர் குழாயில் புதிய குழாயை இணைக்கும் பணி காரணமாக நாளை 8 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்துசெல்லும் 2 ஆயிரம் மிமீ உந்து குழாயில் 500 மிமீ குழாயை இணைக்கும் பணிநாளை (செப்.30) காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழக அரசு தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை ஒன்றிய அரசு நேற்று தடை செய்தது. ஐந்து ஆண்டுகளுக்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஒன்றிய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்து அரசாணை வெளியிட்டால் தான் தடை உத்தரவு செல்லுபடியாகும் என்ற அடிப்படையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் … Read more

'தமிழகம் அமைதியான பூங்காவாக இருக்க வேண்டும்' – ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒரு தலை பட்சமாக தங்கள் கருத்துகளை சொல்லாமல் எல்லோரும் சமம் என்ற கருத்தோடு பணியாற்ற வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். பின்னர் பிரக்ஞானந்தாவிற்கு சதுரங்க சாதுர்ய மணி விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கி கௌரவித்த பிறகு … Read more

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகம்.. மாநகராட்சி அறிவிப்பு.!

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையின் அடையாளமான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு  ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்களும், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை ஏராளமான வசதிகளுடன்  மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை வழங்க … Read more

வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!!

பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து வழக்குப்பதிவுக்கு ஆளான யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஊடகங்களுக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர். போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில் மதுரைக்கரை உரிமையியல் மற்றும் … Read more

கட்டாயத் திருமணத்தால் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்த இளம்பெண்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரால் கட்டாயத் திருமணம் செய்த இளம்பெண், கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி, ஞானமுத்து என்பவரை  காதலித்து வந்த நிலையில், 18 வயது பூர்த்தியாகாத ஜான்சி ராணிக்கு, கடந்த ஆண்டு அவரது பெற்றோர்  கிளிண்டன் என்பவரை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சி ராணி, கடந்த 18-ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் … Read more

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் விரைவில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத, கே.சி.பழனிசாமி என்பவர், சட்ட விரோதமாக, ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என … Read more

திமுக, காங்கிரஸை அழைக்கும் திருமாவளவன்: நீங்க வராட்டா எப்படி?

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சமூக நல்லிணக்க பேரணியை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர்- 02 காந்தி பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியம் , நகரம் மற்றும் மாநகரத் தலைமையிடங்களில் சுமார் 500 இடங்களில் ‘சமூக நல்லிணக்கப் பேரணி’ நடத்துவதென ஏற்கனவே செப்டம்பர் 24 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிப்புச் செய்திருந்தோம். பின்னர், … Read more