இபிஎஃப்ஓ குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், குறைதீர்ப்புக் கூட்டம், வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் குறைதீர்ப்புக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், நிறுவன உரிமையாளர்கள், சந்தாதாரர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளுக்கு நிவாரணம் பெறலாம் … Read more

கர்நாடக வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழக டாக்டர்!!

கர்நாடக வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கர்நாடக வனத் துறையினர் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அடுத்த ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தனது நண்பர்களான நல்லாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் உடன் … Read more

சென்னையில் 312 சந்திப்புகளில் நவீன சென்சார் கருவிகள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

சென்னை: வெளிநாடுகளில் இருப்பதுபோல, வாகன நெரிசலை சரிசெய்ய சென்னையில் 312 சாலை சந்திப்புகளில் நவீன தொலைதூர கட்டுப் பாட்டு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சாலைகளில் நிற்கும் வாகனங்களை துல்லியமாக கணக்கிட்டு சிவப்பு, பச்சை சிக்னலையும், விநாடி ஓட்டத்தையும் இந்த கருவியே கட்டுப்படுத்தும். சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது தொடர்கதையாக உள்ளது. நெரிசலை குறைக்க அண்ணா சாலை … Read more

நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து, 6 லட்சம் டன்கள் … Read more

பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால் சாத்தூரில் சரிந்த பேனா நிப்புத் தொழில்: ஒன்றிய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

சாத்தூர்: சாத்தூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பேனா நிப்புத் தொழில், பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் தற்போது வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் மானியக் கடன்கள் வழங்கி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முக்கியத் தொழிலாக சேவு தயாரித்தல், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் ஆகியவை உள்ளன. இதுதவிர பேனாவுக்கு நிப்புத் தயாரிக்கும் தொழிலும் ஒரு காலத்தில் கொடி … Read more

புதுக்கோட்டை: மதுபோதையில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்ட கும்பல்கள்

புதுக்கோட்டையில் மது போதையில் இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கிக் கொள்ளும் பகிரங்க காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் தனியாருக்குச் சொந்தமான மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுவதால் இங்கு அதிக அளவில் மது பிரியர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இங்கு மது அருந்தி விட்டு வெளியே வந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக … Read more

தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக தொடர்ந்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 

சென்னை: லஞ்ச வழக்கில் கைதான மத்திய புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் சி.ராஜன், அவரது வாகன ஓட்டுநர் முருகேசன் ஆகியோரை விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் சென்னை பிராந்திய கூடுதல் இயக்குநராக பதவி வகித்த சி.ராஜன் தலைமையிலான அதி காரிகள் குழு, கப்பல் மற்றும் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தது. வங்கிக் கணக்கு … Read more

விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு | விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் பெற முதல்வர் அலுவலகத்துக்கு இன்னும் சமர்ப்பிக்கவில்லை: ஆர்டிஐ அதிர்ச்சி

சென்னை: விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்காக, விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறைக்கு அனுப்பி 10 மாதமாகும் நிலையில், இதுவரை தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு ஒப்புதல் பெற சமர்ப்பிக்கவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. எனவே, தமிழக முதல்வருக்கு விரைவாக அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் … Read more