4 மாத சட்டவிரோத காவல்: இரு பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 4 மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, முத்துலட்சுமியின் கணவர் மனோகரன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

தமிழகம் வர முயன்ற 12 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதியில்  நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடிக்கு வருவதற்கு கடற்கரையில் காத்திருந்த 12 தமிழர்கள் உடமைகளுடன் பிடிபட்டனர். விசாரணையில், தமிழகத்திற்கு செல்ல படகிற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். 12 பேரையும் கைது செய்த கடற்படையினர் மேல் விசாரணைக்காக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள்" – காரைக்குடியில் ஜே.பி. நட்டா பேச்சு

காரைக்குடியில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக தேசியதலைவர் ஜேபி நட்டா, கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாத கட்சி திமுக என்றும், தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா. அவர் பேசுகையில், “ராமநாதபுரம் சுவாமிகளின் அருளை பெற்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன். பாரம்பரியமிக்க திருவள்ளுவர் பிறந்த தமிழக பூமிக்கு வருவதில் நான் மிகுந்த … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்திய 2 வயர்லெஸ் சாதனங்கள் பதிவுகள் செய்தது என்ஐஏ!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி படுத்திய இரண்டு வயர்லெஸ் சாதனங்களை பறிமுதல்!  நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் பண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்பதற்கான சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.   தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்பு உடைய நபர்களை கொலை செய்வது, கல்லூரி பேராசரின் கையை … Read more

பசுமை, மீள் திறன், பாதுகாப்பு: 5,904 ச.கி.மீ கொண்ட சென்னை பெருநகருக்கு புதிய போக்குவரத்து திட்டம்

சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதை விரிவாக்கம் செய்து 5904 சதுர கிலோ மீட்டராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னைப் பெருநகர் போக்குவரத்து திட்டம் (COMPREHENSIVE MOBILITY PLAN ) கடந்த 2019-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. தற்போது பெருநகர் … Read more

95% பணிகள் முடிந்ததாக பாஜ தேசிய தலைவரால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தேடிய எம்பிக்கள்: மதுரையில் எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் அதிரடி

மதுரை: 95 சதவீத எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடைந்ததாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய நிலையில், நிறைவடைந்த பணிகளை பார்வையிட மதுரை, விருதுநகர் எம்பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் தேடி பார்த்தனர். அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறா நிலையில், இருந்த ஒரு செங்கலை கூட காணவில்லை என்று அவர்கள் பேட்டி அளித்தனர். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பேசும்போது, ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான … Read more

'இதில் ஏதேனும் ஒன்றை மீறினால்கூட…' ஆர்எஸ்எஸ் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் வெளியீடு

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அந்த அனுமதி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை விதித்துள்ளார். * அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது. * எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது … Read more

திருச்செந்தூரில் சாமி தரிசனம்.. தனித் தீவு செல்லப் போகிறேனே? மனைவியுடன் ரவீந்தர் பேட்டி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ரவீந்தர் சந்திர சேகர். இவர் அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். 1/ Follow Us Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இந்தத் திருமணம் தமிழ்நாடு முழுக்க வைரலானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை … Read more

பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ-யை நசுக்குவதில் பாஜக அரசு கூடுதல் கவனம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து விடக் கூடாதென்னும் உள்நோக்கத்தில்தான் பாஜக அரசு, இவ்வியக்கங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் … Read more

போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு அதிகாரிகள் மீது வழக்குப் பதிய ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை: ஐகோர்ட் கிளையில் கியூ பிரிவு தகவல்

மதுரை: பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை என ஐகோர்ட் கிளையில் கியூ பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த முருககணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கில், விசாரணையை முடித்து 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்தாண்டு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தற்போது வரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, … Read more