போடியில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-5 கடைகளுக்கு ரூ.3,000 அபராதம் விதிப்பு

போடி :  கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, ஆக்கிரமிப்புக்குள்ளான கோயில் நிலம், நீர்நிலைகள் மீட்பு … Read more

ராசிபுரம்: கட்டி முடிக்கப்பட்ட ஒரேவாரத்தில் இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி–பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கிணறு பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொட்டியில் தண்ணீர் நிரப்பி வந்தனர். இந்நிலையில் இன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. இனி, எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்..!

எங்கிருந்தும், எந்நேரமும் இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுவரை, நிலம் எங்கே இருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இனி, வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை … Read more

ஊதிய நிலுவை, பேராசிரியர் நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை – அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் … Read more

சிகரெட் விலையை உயர்த்தினால் இதை குறைக்கலாம் – அரசுக்கு அன்புமணி ஐடியா!

புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதாக பாமக தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66% அதாவது 60.46 லட்சம் உயிரிழப்புகள் இதய நோய், நுரையீரல் சார்ந்த சுவாச நோய்கள், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நிகழ்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்க்கை … Read more

சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து, தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒரு புறம் இருந்தாலும், பேரிடர்களைத் தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலக நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் … Read more

லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசித்த காட்டு யானை

*வாகன ஓட்டிகள் அச்சம் சத்தியமங்கலம் : பண்ணாரி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகளிடம் அச்சமும் பீதியும் ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அறுவடை … Read more

“95% பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ் கட்டடத்தை காணலை”- ஜே.பி.நட்டா கருத்துக்கு எம்.பி விமர்சனம்

எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் இருப்பதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 95 சதவீத … Read more

பயணிகளுக்கு எச்சரிக்கை.. ரயில்களில் இதை எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்..!

‘ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.ரயில்களில் பட்டாசு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த … Read more

மக்களை நேரடியாக பாதிக்கும் மின்கட்டண உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய திமுக அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழக மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து திமுக அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. … Read more