காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தங்கப்பாண்டி மரணத்திற்கு விரைவில் நீதி வேண்டும்: சீமான்

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. கணவர் தங்கபாண்டியை இழந்து இரு குழந்தைகளோடு தவித்துவரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் … Read more

தோல்வி அடைந்தவர்களுக்கு தேர்ச்சி..தேர்வே எழுதாமல் மதிப்பெண் சான்றிதழ்!: மதுரை காமராஜர் பல்கலை.யில் முறைகேடு.. 8 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கி இழப்பு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தொலைதூர கல்வி வாயிலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 – 18ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கேரள மாணவர்கள் நான்கு பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி அடைந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது … Read more

'தீண்டத்தகாத சாதி எது?' – சிபிஎஸ்இ வினாத்தாளால் சர்ச்சை; பள்ளி நிர்வாகம் விளக்கம்

மதுரையில் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ.  பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 6-ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித் தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தது … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21-ஆம் தேதி, மேற்கு … Read more

கும்மிடிப்பூண்டி கிளம்பும் சசிகலா: புரட்சி பயணம் அடுத்த ரவுண்டு!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க சசிகலாவும் தனது பாதையில் அதிமுகவின் உச்ச பதவியை குறிவைத்து காய் நகர்த்துகிறார். அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என உரிமைகோரும் சசிகலா தனது தி.நகர் இல்லத்திலிருந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், “தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான … Read more

கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன்!

கோவை மாவட்டம் ரத்தினபுரி  டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர், அப்போது  போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் … Read more

1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை காலாண்டு தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு  தேர்வு, நாளை ெதாடங்குகிறது. வரும் அக்.1ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, நாளை தொடங்குகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளிவைப்பு

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி  தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை … Read more

பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை … Read more

தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளும் அமைப்பு

சென்னை:  “போதை இல்லா பாதை” என்கிற இயக்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி  முதல் தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பதாகை (போஸ்டர்) வெளியீட்டு நிகழ்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பதாகைகளை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை … Read more