உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி – ரூ.40 லட்சம் சொத்தை விற்று கைவரிசை !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்திரசேகருக்கும், காரைக்குடியைச் சேர்ந்த நதியா ஸ்ரீ என்பவருக்கும், கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளனர்.  இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில், நதியா ஸ்ரீ தனது … Read more

மினி கூவமாக மாறும் பழநி வையாபுரி குளம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பழநி : சாக்கடை நீர் கலந்து பழநி வையாபுரி குளம் மினி கூவமாக மாறி வருவதால் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பழநி நகரம் 6.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சியில் தற்போது சுமார் 90  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு சுமார் 13 வார்டுகளின் மக்கள் பயன்பெறும் வகையில் 6 ஆயிரத்து 458 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் … Read more

வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள் – குழந்தை இறந்து பிறந்த பரிதாபம்

சூனாம்பேடு அருகே வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா (33) இவர், இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூனாம்பேடு, இல்லிடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புஷ்பா சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் … Read more

நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்யும் அண்ணா பல்கலைக்கழகம் 

சென்னை: தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சென்னை ஐஐடி உள்ளிட்ட புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய சம்மந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான சென்னை ஐஐடி, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு பொறியியல் நிறுவனங்களை மூன்றாம் தரக்கட்டுப்பாடு குழுவாக நியமனம் செய்ய … Read more

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை குறைக்கும் திமுக அரசு: ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

கொண்டு வந்த திட்டங்களை குறைத்து வருவது போல் தற்போது விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை திமுக அரசு பாதியாக குறைத்து வருகிறது என்ற ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு நிலையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஊக்கதொகைகள் அம்மா காலத்திலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் வழங்கப்பட்டன. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் ஒரு கோடி ரூபாயும், … Read more

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு; டெல்லியில் பரபரப்பு பேட்டி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து ஈபிஎஸ் விவாதித்தகக தகவல் அளித்துள்ளனர். அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்துள்ளது. உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின் முழு விவரம். … Read more

வால்பாறை அருகே வேட்டை பயிற்சியில் ஆண் புலிக்கு பல் உடைந்தது-மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

வால்பாறை : வால்பாறை அருகே, வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வரும் புலிக்கு, வேட்டை பல் உடைந்ததால் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலி உடல் மெலிந்து காணப்பட்டது. மேலும் முள்ளம்பன்றி வேட்டையின் போது காயம் அடைந்தது. இதையடுத்து இந்த புலிக்குட்டியை, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மீட்டனர். அதன்பின் வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் … Read more

திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்! இதுதான் காரணமா?

திமுகவில் இருந்து விலகியதை அறிவித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன். திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து தான் விலகியதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடம் … Read more

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன்: அமித் ஷாவை சந்தித்த பின்னர் இபிஎஸ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்துறை அமைச்சரை இன்று சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கோதாவரி – காவிரி இணைப்பு … Read more

எடப்பாடி பழனிசாமி சொன்ன மெசேஜ் – பாஜக மேலிடம் டென்ஷன்!

டெல்லி சென்றுள்ள , தனது முடிவில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது முறையாக, அவர் டெல்லிக்கு சென்றுள்ளார். எனினும் இந்த முறை, டெல்லி பயணம், அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காரணம், டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு … Read more