நீட் தேர்வு விடைத்தாள் பிரதியை தாக்கல் செய்ய உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: நீட் தேர்வு விடைத்தாளின் கார்பன் பிரதியை செப். 23-ல் அவசியம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ – சீமான் கேள்வி

சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் திராவிட மாடலின் தீண்டாமை என சீமான் பேட்டியளித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக காவல்துறை தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “திராவிட மாடல் என்பது … Read more

கனடா துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் மரணம்… உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். கனடா துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் மரணம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்: ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்… உலகச் செய்திகள் மில்டனில் கடந்த திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சத்விந்தர் சிங், ஹாமில்டன் … Read more

“எனது பேரன், பேத்திக்கும் கூட காய்ச்சல் பாதித்து 3 நாட்களில் குணமடைந்தனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “எனது பேரன், பேத்தி கூட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 நாட்களில் குணமடைந்துவிட்டனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை … Read more

சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 19.09.2022 மற்றும் 20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.09.2022 மற்றும் 22.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர … Read more

புதுவையை தொடர்ந்து கடலூரிலும் பரவும் வைரஸ் காய்ச்சல்; மருத்துவமனையில் குவியும் மக்கள்!

கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவைக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காலை முதல் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் சிகிச்சை பெற … Read more

ஆரோவில் அருகே ஒரே கடையில் அடுத்தடுத்து 11 சிலைகள் மீட்பு: வேறு கடத்தல் சிலைகள் உள்ளனவா என அதிகாரிகள் விசாரணை

விழுப்புரம் : ஆரோவில்லை அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியில் செயல்படும் பழங்கால சிலைகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து 3 கற்சிலைகள் உள்பட மேலும் 4 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 16ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள கன்னிகா கார்டன் பகுதியில் மெட்டல் கிராப்ட் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் பழங்கால உலோக சிலை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனைகளை அதிரடியாக … Read more

குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களின் கை ரேகைப் பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரைப் பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் … Read more

அச்சுறுத்தும் காய்ச்சல்… பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது?- அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சளி, இருமலுடன்கூடிய இநத ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிவருவது அதிர்ச்சி தகவல் என்றாவ், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவல். குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா, டெங்கு காய்ச்சல், ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல் என விதவிதமான வைரஸ் காய்ச்சல்கள் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றன. காய்ச்சலுக்கு ஆளாவோரில் பெரும்பாலானவர்கள் … Read more

நீட் தேர்வை மிஞ்சிய டிஎன்பிஎஸ்சி: 'வெளியில் போகக்கூடாது, அடக்கிக்கொள்ளுங்கள்' – தேர்வறையில் பெண்ணுக்கு நடந்த அவலம்…

தமிழ்நாடு அரசு துறைகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும், GROUP-8 தேர்வு கடந்த செப். 11ஆம் தேதி நடைபெற்றது.  இத்தேர்வு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திலும் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்ற தேர்வில், தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வறையில் இருக்க வேண்டும் … Read more