சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகம்.. மாநகராட்சி அறிவிப்பு.!

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையின் அடையாளமான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு  ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்களும், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை ஏராளமான வசதிகளுடன்  மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை வழங்க … Read more

வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!!

பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து வழக்குப்பதிவுக்கு ஆளான யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஊடகங்களுக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர். போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில் மதுரைக்கரை உரிமையியல் மற்றும் … Read more

கட்டாயத் திருமணத்தால் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்த இளம்பெண்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரால் கட்டாயத் திருமணம் செய்த இளம்பெண், கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி, ஞானமுத்து என்பவரை  காதலித்து வந்த நிலையில், 18 வயது பூர்த்தியாகாத ஜான்சி ராணிக்கு, கடந்த ஆண்டு அவரது பெற்றோர்  கிளிண்டன் என்பவரை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சி ராணி, கடந்த 18-ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் … Read more

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் விரைவில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத, கே.சி.பழனிசாமி என்பவர், சட்ட விரோதமாக, ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என … Read more

திமுக, காங்கிரஸை அழைக்கும் திருமாவளவன்: நீங்க வராட்டா எப்படி?

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சமூக நல்லிணக்க பேரணியை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர்- 02 காந்தி பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியம் , நகரம் மற்றும் மாநகரத் தலைமையிடங்களில் சுமார் 500 இடங்களில் ‘சமூக நல்லிணக்கப் பேரணி’ நடத்துவதென ஏற்கனவே செப்டம்பர் 24 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிப்புச் செய்திருந்தோம். பின்னர், … Read more

நானாவது இரட்டை வேடம் போடுகிறேன்… ஆனால் ஓபிஎஸ் பல வேடம் போடுகிறார் – துரைமுருகன்

ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது என அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டியளித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே, சித்தூர் திருத்தணி சாலையை இணைக்கும் தரைபாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பழுதானது. இந்நிலையில், அதே இடத்தில் புதியதாக ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். அப்போது … Read more

அடிக்கடி இடத்தை மாற்றும் நடிகை மீரா மிதுன்!!

நடிகை மீரா மிதுன் இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் … Read more