“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” என்று வாட்சப்பில் தன் அக்காவிற்கு ஆடியோ அனுப்பிவிட்டு திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் … Read more

நம்பர் ஒன் நடிகை நயன்தாரா இல்லையா? சமந்தா நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில், நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் கூறியதால் அவருக்கு எதிராக நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருவதால் சர்ச்சையாகி உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சமந்தாவுடன் நடிகர் அக்‌ஷய் குமாரும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் புரோமோ … Read more

தேனி ஆர்ப்பாட்டம் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பதில் சொல்லும் வகையில் இருக்க வேண்டும்: ஆர்பி.உதயகுமார்

மதுரை: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், இன்று மதுரையில் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேனியில் நாளைமறுநாள் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் 25,000 பேரை திரட்ட முடிவு செய்துள்ளனர். மதுரையில் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் தேனியில் நாளை மறு நா 26ம் தேதி நடக்கிறது. தற்போது தேனி மாவட்டச் செயலாளராக இருந்த சையத்கான் ஓ.பன்னீர்செல்வம் அணியில் … Read more

குரூப் 4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் குழப்பம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர். தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 8-ம் … Read more

மதுரையில் 3 இடங்களில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அணியினர் தொண்டர் பலத்தைக் காட்ட திட்டம்

மதுரை: செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுரை; மதுரையில் நாளை 3 இடங்களில் வீட்டு வரி முதல் மின்கட்டணம் வரை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், முனனாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா … Read more

எங்கள் ஊரில் இப்படியொரு பிரம்மாண்டமான செஸ் போட்டியா? வியப்பில் பூஞ்சேரி கிராம மக்கள்

இத்தனை பிரம்மாண்டமான 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தங்கள் ஊரில் நடக்கிறதா என பூஞ்சேரி கிராம மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தமிழகத்தில் குரங்கம்மையா?- மா. சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், ‘‘குரங்கு அம்மை உலக … Read more

14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இடையே பதவி போட்டி நிலவும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்களை ஓ. பன்னீர்செல்லம் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ மாவட்டக் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள்‌ கீழ்க்காணும்‌ மாவட்டங்களுக்கு . இன்று முதல்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌. அவர்களின் விவரம்: 1. வெங்கட்ராமன்‌ – கழக வர்த்தக அணிப்‌ பிரிவுச்‌ செயலாளா்‌ சென்னை புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌. 2. தர்மர்‌ – இராமநாதபுரம்‌ மாவட்டக்‌ … Read more

ஆட்டோக்கள் மீது கார் மோதி விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழப்பு

ஈசிஆர் சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் முன்னால் சென்ற இரண்டு ஆட்டோக்கள் மீது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்துக்காக காத்திருந்த தோட்ட காவலாளியான வட மாநிலத்தைச் சேர்ந்த சாம்பலால் (55) மற்றும் அதே பகுதியில் வேலைசெய்யும் வாயலூர் கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (52) என்ற … Read more

TNPSC Group 4 Exam: தமிழ் பகுதி ஈஸி; பொது அறிவு சற்று கடினம் – தேர்வர்கள் கருத்து

TNPSC group 4 exam analysis today: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அதிகமானோர் எழுதும் தேர்வு குரூப் 4 தேர்வு. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் இந்த … Read more