சென்னையில் இன்று சிறப்பு பொதுக்குழு: பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணி

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி அறிவிக்கப்படுகிறார். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் இன்று(மே 28) காலை 11 மணி அளவில் நடக்கிறது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உட்பட தமிழகம், … Read more

TNPSC Group 2 Answer Key: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஆன்சர் கீ வெளியீடு; செக் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதில், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்நிலையில், தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த … Read more

கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் ஐ.டி.ரெய்டு.!!

கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மொத்தமாக 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனந்தாஸ் குழுமத்தின் நிறுவனர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Source link

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர்மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

ராமநாதபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் கேனுடன் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். கொடுமலூரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் – பிரியா தம்பதியருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க வந்த மாயகிருஷ்ணனை … Read more

கருணாநிதி சிலை இன்று திறப்பு – குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தென்னிந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பன்முகத் திறமை … Read more

‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்

கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, அதன்மீதான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் வழியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கமாக இருக்கக் கூடாது என சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் சுகாதாரத்துறை செயலர். அவர் எழுதியுள்ள கடிதத்தில், `சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம் … Read more

தேசிய கல்விக் கொள்கை: ஆளுனர் ரவி- அமைச்சர் பொன்முடி மீண்டும் காரசாரம்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதில் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கத்தில் இந்தியாவில் உள்ள 38 மத்திய பல்கலை கழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய ஆர் என் ரவி, “தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற … Read more

சாலை விபத்தில் பலியான சிறுவன்.. கோடை விடுமுறை கொண்டாட்டி விட்டு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..!

வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கோடை விடுமுறையை கொண்டாட கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளார். கோடை விடுமுறை முடிந்து விட்டது செல்வராஜ் மற்றும் அவரது பெறன் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியது.  இதில் இவர் யுவன் கிரிசின் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

சென்னையில் முன்னாள்  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு  இன்று திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைப்பதற்கான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். Source link

கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கனமழை – 500 ஏக்கரில் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 26-ம் தேதி இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் சூறைக் காற்றும் வீசியது. இதில், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வி.காட்டுப்பாளையம், எம்.புதூர், வெள்ளக்கரை, பத்திரக்கோட்டை, … Read more