சென்னை || விசாரணை கைதி மர்ம மரணம்? – போலீசார் விசாரணை.!

சென்னை புரசைவாக்கத்தில் நேற்று இரவு வாகன தணிக்கையில் போது பிடிபட்ட ரமேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இருவரிடம் இருந்து இரண்டு கஞ்சா போட்டாலும், பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் திடீரென விக்னேஷுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விக்னேஷ் வலிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக … Read more

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்… வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம், டெல்டா பகுதிகள், கடலோர மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி 

சென்னை: கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 4-ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது 5 அதிமுக கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள், வாக்குச்சீட்டை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுப்புராயலுவிடம் காண்பித்த பின் வாக்குப்பெட்டியில் போட்டதன் மூலம் தேர்தல் ரகசியத்தை மீறிவிட்டனர். எனவே தேர்தலை செல்லாது என … Read more

'திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடுவதா?' -சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்

திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்புபடுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர்” என்று கூறினார். இன்றைய தினம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் … Read more

ஸ்கூபா டைவிங் செய்த நடிகை.. விஜய்யின் அடுத்த பட இசையமைப்பாளர்.. மேலும் செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையில் சிபிராஜ் நடித்துள்ள படம் மாயோன். இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்து அறிவிப்பு எதுவும் வராமல் இருந்து வந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகர் சிபிராஜ் இந்தப் படம் குறித்து அப்டேட்டை டுவிட்டரில் வெளியிட்டார். அந்தப் பதிவில் படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸாகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை அருண் மொழி … Read more

தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர்.. ஓ.பி.எஸ் நன்றி.!!

இந்தி மொழி குறித்த ஓ பன்னீர்செல்வம் அறிக்கைக்கு விடையளித்துள்ள தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சருக்கு  ஓ பன்னீர்செல்வம்  பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் காண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் அவர்கள் … Read more

யாராலும் திருட முடியாத சொத்து கல்வி தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாராலும் திருட முடியாத சொத்து கல்வி தான் என தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்த அவர், பள்ளி பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதோடு, அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் வருகை தந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கிய ஆளுநர், நேற்று காலை நடராஜர் கோயிலுக்கு மனைவியுடன் சென்றார். அவர்களை கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை ஆளுநரும், அவரது மனைவியும் தரிசனம்செய்தனர். தீட்சிதர்கள் … Read more

பலிகடாவாக மாறிப்போனார் இசைஞானி! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா கருத்துக்கு ஆதரவும்… எதிர்ப்பும்… உங்கள் நிலைப்பாடு என்ன?’ எனக் … Read more