குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வருகிறது..!!

குவைத்: குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார். வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தை தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் … Read more

இந்துக்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது எஸ்பியிடம் பாஜக புகார்

இந்துக்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அதன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்ம கார்த்திக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர் குமார் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக எம்பி ஆ.ராசா, தொடர்ந்து இந்து மதத்தை பற்றி … Read more

ஆவடி: விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு … Read more

உணவு எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்து மதத்தினரை சர்ச்சைக்குறிய வகையில் பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜகவினர் புகார்

இந்து மதத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக எம்.பி யும், திமுக துணை பொது செயளாலருமான ஆ.ராசா இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வேசிகளின் மகன்கள் என சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் … Read more

இந்தி தினம்: இந்தியின் அந்தஸ்து குறித்த விவாத வரலாறு

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வாய்ப்பு, பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அலுவல்பூர்வமான மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில், அதில், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி என்ற அந்தஸ்த்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்ஷி-அய்யங்கார் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (15.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 21/18/14 நவீன் தக்காளி 40 நாட்டு தக்காளி 38/35 உருளை 35/25/23 சின்ன வெங்காயம் 40/35/30 ஊட்டி கேரட் 110/90/85 பெங்களூர் கேரட் 70/60 பீன்ஸ் 70/60 பீட்ரூட். ஊட்டி 50/40 கர்நாடக பீட்ரூட் 28 சவ் சவ் 20/17 முள்ளங்கி 45/40 முட்டை கோஸ் 15/10 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி … Read more

பூங்கோரை பாசியால் பச்சை நிறமாக மாறிய மன்னார் வளைகுடா கடல்: சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் நீரோட்டத்தால் பச்சை நிற பூங்கோரைப் பாசிகள் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கின. இந்தப் பாசிகளால் பாம்பன் முதல் மண்டபம் வரையிலுமான … Read more

காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா… மு.க.ஸ்டாலின் சிறப்புரை!

மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரையாற்றுகையில், அமைச்சர்கள் ஏ.வே.வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, கணேசன், பி.டி.ஆர்.,பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, வெங்கடேசன், பூமிநாதன், சமூக சேவகி கமலாத்தாள் உள்ளிட்டோரை வரவேற்கிறேன். என் வாழ்வின் பொன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது, பசித்தோறுக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் இத்திட்டம், பள்ளிக்கு பசியோடு வரும் … Read more

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு முறை பயணமாக மதுரை சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி … Read more