கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலின் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம்
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2ம் தேதி பூர்வாங்க பூஜைகள், முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. பின்னர் … Read more