அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தேவை: அண்ணாமலை கோரிக்கை

சென்னை: அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிமென்ட்ஆலைக்காக, 1996-ல் அரியலூர்மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுமார் 600 விவசாயிகளிடம் இருந்து 300 ஏக்கர் விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குவதாக அரசு அப்போது அறிவித்தது. அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை ஆராய்ந்த பின்னர்,2017-ல் அரியலூர் சார்பு நீதிமன்றம்,ஒரு ஏக்கருக்கு … Read more

பருவமழை முன்னெச்சரிக்கை: இறையன்பு பிறப்பித்த உத்தரவு!

வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தலைமையில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைமைச் … Read more

கோவை: எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை

கோவை, கோட்டைமேட்டில்  எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு இருந்தனர். கட்சி நிதி வசூல் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களை வருமான ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள ஒரு கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள தகவலையும் ஆய்வு செய்தனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்று விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் சமீபத்தில் … Read more

27 நாட்கள்..2200 கி.மீ! கல்லூரி மாணவனின் ’புவி வெப்பமயமாதல்’ விழிப்புணர்வு சைக்கிள் பயணம்!

புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, 27 நாட்கள் 2200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் சுற்றி வந்த நாகை மாணவருக்கு, மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகை ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறன் என்பவரின் மகன் ஹரிஹர மாதவன். இவர், புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, கடந்த மாதம் 18 ஆம் தேதி நாகையில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். ராமேஸ்வரம் தூத்துக்குடி … Read more

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய காரை சிலர் தள்ளிச்செல்லும் பயணிகள்.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய காரை சிலர் தள்ளிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 16 சாலையில் வெள்ளநீர் ஆறை போல் ஓடுகிறது. இந்நிலையில் அந்த சாலையை கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி பாதி வழியிலே நின்றதால் அதில் பயணித்தவர்கள் … Read more

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் நாளை தொடங்குகிறார்

சென்னை: அண்ணா பிறந்த தினத்தையொட்டி மதுரையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், செப்.16 முதல் திட்டம் அமலாகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசாணைகள் வெளியீடு: அதன்படி, … Read more

'2024 தேர்தலில் என் தலைமையில் அதிமுக வெல்லும்' ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா!

கொங்கு மண்டலத்தில் புரட்சிப் பயணம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசிய “அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது தான் திமுக அரசின் சாதனை எனவும், அதிமுகவை மீட்பது தான் எனது முழு பணி என்றும் பேசினார். வரலாறு உள்ள வரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களை யாரும் … Read more

தனியார் பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிக்கு விடுமுறை

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு 2-வது நாளாக விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.