போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: வருமானவரித் துறை எச்சரிக்கை
சென்னை: வரி செலுத்துமாறு வரும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. வருமானவரித் துறை அலுவலகம்போல் நோட்டீஸ் அனுப்பி மர்ம நபர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு அவர்களது சேமிப்புக் கணக்கில் இருந்து வரி செலுத்துமாறு கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மை பொதுமக்களும் இதை நம்பி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். … Read more