என் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன், புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல் சாகுபடி அதிகம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி 50 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை, 70 வயதான ஓட்டுநர் கண்ணன் ஓட்டி சென்றார். ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது பேருந்தின் வேகம் அதிகரித்த நிலையில், பிரேக் அடித்தும் வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து வேகமெடுத்து பாய்ந்ததை கட்டுப்படுத்த இயலவில்லை … Read more

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள்: பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ” சிறார் திரைப்பட விழா” என்ற பெயரில் … Read more

காவல் நிலைய வாசலில் வைத்து பெண்ணை ஆக்‌ரோஷமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ – வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா.  இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய, சோமு என்கின்ற சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள் உறவுக்கு பின், காவலர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.ஐ. சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  காவலர் வீட்டிற்கு சென்று பிரியா … Read more

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை: ஆய்வில் கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை

தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, ஏமகுட்டியூர், தேவரசம்பட்டி, லளிகம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, எர்ரப்பட்டி, சவுளூர், பாளையம்புதூர், பாப்பாரப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 3 ஆயிரத்திற்கும் … Read more

'என்ன கடத்தி ரூ.1.50 கோடியை கொள்ளையடித்தனர்'-அதிமுக நிர்வாகி மீது முன்னாள் எம்எல்ஏ புகார்

பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்துச் சென்றதாக முன்னாள் அதிமுக நிர்வாகி மீது புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவை சேர்ந்தவர். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி … Read more

Tamil news today live: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி  சண்டை கலைஞர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொடநாடு வழக்கு இன்று விசாரணை கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு … Read more

திருப்பூர்: மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சிவகுமார் (வயது42). இவர் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் நேற்று மது குடித்துவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்த … Read more

விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமயையே விஞ்சி விட்டனர்” – அண்ணாமலை!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தின் மூலம், விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமையை விஞ்சி விட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக எம்எல்ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்திற்கு மேல் காசோலைகளை தான் பயன்படுத்த வேண்டும், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலுத்தினால் வருமானவரித்துறை … Read more

தஞ்சை கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு பாதிப்பு இல்லை: நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார் 6 ஆயிரத்து 933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழையால் நெல் மூட்டைகள் நனைந்துவிட்டது என்று சில பத்திரிகைகளில் … Read more