தினமும் 3 வேளை வெந்தயம்… சுகர் இருக்கிறவங்க இதை ட்ரை பண்றீங்களா?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்ககரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அதே சமயம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை முறை உணவுகள் மூலம் உடலின் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். தங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான நிலைக்கு … Read more

“அழிப்பதை ஏற்க முடியாது” – பரந்தூர் கருத்து கேட்பில் அன்புமணி ஆவேசம்

காஞ்சிபுரம்: “ஒருபக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல் இரண்டையுமே சமமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை அழித்துதான் இன்னொன்றை நான் கொண்டு வருவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் பாமக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “இது எந்த … Read more

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கின் விசாரணை நிலை என்ன?.. அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தரப்பில், வழக்கின் விசாரணையை முடிக்க … Read more

’திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் உள்நோக்கம்’.. ஜி.யு.போப்பை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளூர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதில் பேசிய ஆளுநர், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் விடிவெள்ளி என்றார். திருக்குறள் என்பது தற்போது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கி விட்டதாகவும், ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் … Read more

ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பென்சில். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்த இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடித்த இந்த படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் அடுத்ததாக வாசுவின் கர்பிணிகள் என்ற … Read more

மேல்முறையீட்டு வழக்கில் அனல்பறந்த வாதங்கள்.. தீர்ப்பு ஒத்திவைப்பு.!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதிகட்ட விசாரணையில் அனல்பறக்கும் வாதங்கள் அரங்கேறின. உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இறுதி விசாரணையில், காலையில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  ஓபிஎஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில்  கோரப்படாத நிவாரணத்தை தனிநீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் இபிஎஸ் தரப்பில் … Read more

அமைச்சர் உறுதி அளித்ததால் மவுனப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட பாஜக விவசாய அணி

கோவை: மவுனப் போராட்டம் நடத்திய பாஜக விவசாய அணி போராட்டக்காரர்களை தமிழக அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக விவசாய அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.1856.88 கோடி செலவில் 96.5% முடிக்கப்பட்ட அவினாசி – அத்திக்கடவு திட்டம் வெறும் 2.2 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்காமல் 17 மாதங்களாக தடைப்பட்டு நிற்பதையும்,ஈரோடு வருகைபுரியும் தமிழக … Read more

மிஸ்டு கால் கொடுத்து என் கட்சியில் இணையலாம்…! – தமிழருவி மணியன் அழைப்பு..!

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தை சில தினங்களுக்கு முன்பாக பரபரப்பிற்கு உள்ளாக்கியவர் தமிழருவி மணியன். அரசியலில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் வெளியுலகில் பெரிதாய் அவரின் கருத்துகள் வெளிவரவில்லை. இந்த நினையில் அரசியலில் முழுக்கு போட்டதை தவறாக எண்ணுகிறேன் என்று அறிவித்தார் தமிழருவி மணியன். காந்திய மக்கள் இயக்கம் எனும் பெயரில் இயக்கம் நடத்தி வந்த தமிழருவி மணியன் அதை இப்போது “காமராஜர் மக்கள் கட்சி” … Read more

விவசாயத்தில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு கிசான் பிரகதி விருதுகள்

செய்யூர்: இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடியில் சாதனைகள் கண்ட தமிழக விவசாயிகள் 9 பேருக்கு கிசான் பிரகதி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்திய வேளாண் துறையில் இயற்கை விவசாயம மற்றும் மறு உருவாக்க சாகுபடி செய்வது என்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நடைமுறைபடுத்த அவுட்க்ரோ என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளுக்கு ஊக்கமும் வழிமுறைகளையும் அளித்து வந்தது. இந்நிலையில், இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடி பணியில் புதுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய … Read more

புதுவித மொழியில் பார்வையாளர்களை மிரட்டும் விசித்திர நாடகம்! அசத்தும் 'மணல் மகுடி' குழு!

உங்கள் வாழ்க்கை சூழலில் ஒரு பொழுதேனும் மணல்மகுடி நாடகக் குழுவின் பெயரை கேட்டால், அதில் பங்கேற்காமல் விட்டு விடாதீர்கள். நீங்கள் தவறவிட கூடாத ஒரு நாடக நிகழ்ச்சி என்பதை கண்டு கேட்ட பின்பு உணர வைக்கின்றன இந்த விசித்திர புதுமொழி நாடகங்கள். கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நாடக குழு ‘மணல் மகுடி’. இதன் ஆசிரியர் முருக பூபதி. வாராவாரமோ, மாதமாதமோ அல்ல எப்போது பாமர மக்களின் குரல் ஒலிக்க முடியாமல் போகிறதோ, அவர்களின் … Read more