ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக சார்பில் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கலைஞரின் வெண்கல சிலை அருகே திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி  வைத்தார். கலைஞரின் சிலையை திறந்து வாய்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; தந்தை சிலையை திறந்து வைக்கும் மகனாக இல்லாமல், தலைவர் சிலையை திறந்து வைக்கும் தொண்டனாக வந்துளேன். ஈரோட்டுக்கும், கலைஞருக்கும் ஏராளமான தொடர்புகள் … Read more

வித்தியாசமான திரவப் பொருளால் புதுப்பெண் எரித்துக் கொலை?..திருமணமான 4 மாதங்களில் அதிர்ச்சி!

சீர்காழி அருகே வரசட்சணைக் கொடுமையால் திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் – உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26). இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண … Read more

நீங்களும் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர் ஆகலாம்: விஜய் டி.வி முக்கிய அப்டேட்

பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ப்ரமோ மூலம் விஜய் டிவி அறிவித்துள்ளது. ரசிகர்களின் ரசனைக்கேற்ப ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. எவ்வித தொடர்பும் இல்லாமல் சக … Read more

“திமுகவில் இருந்த அதிகாரப் போட்டிகள் தெரியாதா?” – முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பதிலடி

மதுரை: “அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதல்வர் கூறுவது, ஜனநாயக பாதையில் இருந்து அவர் சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு சென்று நலத்திட்டம், பொதுக்கூட்டங்களில் முதல்வர் பேசிய விதம் முரணானது. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களை … Read more

தமிழ்நாட்டில் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் கூடுதலான சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக அனைத்து வாகனங்களிடமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீதும் லிட்டருக்கென்று சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் தீர்வையாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 28 சுங்க … Read more

அதிமுக அலுவலக கலவர விவகாரம்; ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு

அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக அலுவலகம் சென்றது. அங்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இருந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின்படி அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சிவி சண்முகம் … Read more

சீதப்பாலில் தாடகை மலை அடிவாரத்தில் வேட்டு வைத்து பாறைகள் தகர்ப்பு: வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்: சீதப்பால் தாடகை மலைஅடிவாரத்தில் பாறைகள் வேட்டு வைத்து  தகர்க்கப்பட்டது குறித்து வனத்துறை மற்றும் வருவாயத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் ஜல்லி கல், மண்ணிற்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. தற்போது தேவைக்காக 2 குவாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில பகுதிகளில் திருட்டுத்தனமாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தேங்காய்பட்டிணம் பகுதியில் திருட்டு குவாரியை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதற்கிடையே காப்புக் காடான தாடகை மலை அடிவாரத்தில் திருட்டுத்தனமாக … Read more

ரயிலில் போதை ஆசாமியால் பெண் காவலருக்கு கத்திக்குத்து – தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள்!

நேற்று முன்தினம் இரவு போதையிலிருந்த ஒருவரால் மின்சார ரயிலில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவலர், தப்பித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஆசிர்வா. பெண் காவலர் ஆசிர்வாவை, நேற்று முன்தினம் இரவு போதையில் பயணித்த ஒருவர் கத்தியால் கடுமையாக தாக்கியிருந்தர். அப்பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்திருந்தது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் … Read more

தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகன் புதியரசன்(17) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதியரசன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புதியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி … Read more

அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு; போலீஸ் காவல் மனுவும் தள்ளுபடி 

மதுரை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது … Read more