டிஜிபி மூலம் எடப்பாடிக்கு பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது திமுக குறித்தான விமர்சனங்களையும் முனவைக்க அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவறுவதில்லை. அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் … Read more

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 26 இடங்களில் தோல் தொழிற்சாலைகளில் 2வது நாளாக ஐடி ரெய்டு: வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியது

ஆம்பூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் உற்பத்தி ெதாழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பெருமளவு வரிஏய்ப்பு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பரிதா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை வருமான … Read more

மோப்பநாய் பயிற்சிக்கு வழங்கிய கஞ்சாவை முறைகேடாக பயன்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டையில் மோப்பநாய் பயிற்சிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சாவை முறைகேடாக எடுத்து பயன்படுத்திய மோப்பநாய் பிரிவில் பணியாற்றிய ஆயுதப்படை காவலர்கள் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் தினசரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை ஆயுதப்படை … Read more

சென்னை | 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி அறிக்கை

சென்னை: சென்னையில் உள்ள 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என உயர் நீதிமன்றத்தில் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், “மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக உடற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “விளையாட்டு … Read more

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இணைப்புகளில் கலவை பூசும் பணி தொடக்கம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு

கன்னியாகுமரி: சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர்  சிலை, உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க ரசாயன கலவை பூச தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதற்கான பணி கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பணியை தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நவம்பர் 1க்குள் பணியை முடித்து 2ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா  பயணிகளை  அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிலையை  … Read more

Today Rasi Palan 25th August 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 25th August 2022, Thursday ராசிபலன் ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 25th August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 25ம் தேதி 2022ராசி … Read more

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் திறன் தேர்வு ஒத்திவைப்பு.!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தை மழைநீர் சூழ்ந்ததால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் திறன் தேர்வு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 444 உதவி ஆய்வாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர். இதில் 1,775 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது.   … Read more

அதிகாலை பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேக்கம்

சென்னை: சென்னையில் நேற்று அதிகாலையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னையில் கடந்த சில தினங்களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் பரவலாக தொடங்கிய மழை, கனமழையாக பெய்தது. நேற்று காலை 6.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பூர், நுங்கம்பாக்கம் … Read more

டெல்டாவில் விடிய விடிய கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாப சாவு

திருவாரூர்: தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணி முதல் நேற்று அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால் நெல் சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.இதனால் விவசாயிகள் வேதனை … Read more