2023-ம் ஆண்டுக்கான H-1B விசா வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு… உலகச் செய்திகள்

USA reaches H1B visa cap today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். வெள்ளத்தில் இந்திய அமெரிக்க பெண் மரணம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சியோன் தேசிய பூங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 29 வயதான இந்திய-அமெரிக்க பெண் மலையேறுபவர் இறந்து கிடந்ததாக பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரிசோனாவில் உள்ள டக்ஸனைச் சேர்ந்த ஜெடல் அக்னிஹோத்ரி ஆகஸ்ட் 19 … Read more

பெற்ற தாயை கவனிக்காமல் சென்னையில் தவிக்கவிட்ட அமெரிக்க ரிட்டனுக்கு ஆப்பு..! போலீசுக்கு நீதிமன்றம் பாராட்டு

பெற்ற தாயை கவனிக்காமல் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மகனை விமானநிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். உரிய நடவடிக்கை மேற்கொண்டதாக போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துர்காம்பாள். 74 வயதான மூதாட்டியான இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் உயிரிழந்துவிட, மற்றொரு மகன் ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள் திருமணம் முடிந்து அவரது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். அமெரிக்காவில் பன்னாட்டு … Read more

சென்னையில் செப்.10-ல் ஜாக்டோ-ஜியோ மாநாடு – ‘முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு’

மதுரை: சென்னையில் செப்டம்பர் 10-ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் ‘வாழ்வாதார நம்பிக்கை’ மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார். மதுரையில் இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைப்பணியாளர் சங்க கட்டிடத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: ”கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல போராட்டங்கள் நடத்தியும் மனுவைக் கூட பெறவில்லை. அப்போது போராடியபோது, போராட்ட … Read more

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லையா… அதிமுக முன்னாள் எம்பியிடம் நீதிபதி காட்டம்!

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் ஓலைப்பாய் அச்சு கண்டுபிடிப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மற்றும் மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், … Read more

திருப்பூர்: இரு குழந்தைகளை கம்பியால் அடித்துக்கொன்ற தாய்… தலைவலிதான் காரணமா?

திருப்பூர் அருகே தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரு குழந்தைகளை கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத். இவர் அதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஹர்சிதா என்ற மகளும், கலைவேந்தன் எனும் மகனும் உள்ளனர். மகள் ஹர்சிதா 8-ம் வகுப்பும்., மகன் கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து … Read more

இனமானம், தன்மானம் இல்லாத கூட்டம் தி.மு.க ஆட்சியை விமர்சிக்கிறது: கோவையில் ஸ்டாலின் தாக்கு

கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தும் – புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இதையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு இதுவரை ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த … Read more

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்.. காவல்துறையினர் விசாரணை..!

கர்ப்பிணி பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டம், விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தமுருகேசன் மகள் நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அடிக்கடி வாந்தி மயக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். … Read more

ஸ்ரீமதியின் தாய்க்கு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகள் என்ன ? நடைபயணம் தள்ளிவைக்கப்பட்ட பின்னணி

மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றததால், அவர் நீதிகேட்டு நடை பயணம் மேற்கொள்ள இருந்ததாகவும், முதல் அமைச்சரை சந்திக்க சனிக்கிழமை நேரம் ஒதுக்கிக் கொடுத்திருப்பதால் அவர் பொறுமை காத்து வருவதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை நோக்கி  நடை பயணம் செல்லவிருப்பதாக மாணவியின் தாய் செல்வி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது  நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவரது வழக்கறிஞர் காசிவிஸ்வ நாதன், அதற்காண காரணத்தையும் விளக்கி உள்ளார் … Read more

‘புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர்’ – ‘உண்மையே’ என்று ஆதங்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: “ஜிப்மரில் புதுச்சேரி மக்களுக்கான சிகிச்சை சரியாக இல்லை என்பதே உண்மை” என்று சட்டபேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி விமர்சித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: நாஜிம்(திமுக): “ஜிப்மர் நிறுவனத்தோடு சுகாதாரத் துறை போட்டுக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் பொது மருத்துவமனை சீரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30 கோடி செலவிடப்பட்டதா?” முதல்வர் ரங்கசாமி: “காரைக்கால் அரசு மருத்துவமனை சீரமைப்பு பணி கரோனா பாதிப்பில் நிறுத்தப்பட்டது. அதன்பின் எந்தப் பணியும் நடக்கவில்லை. செலவு கணக்குகளை ஜிப்மர் … Read more