நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்… இனி கவலை இல்லை!

மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்கும் விதமாக மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முறை ஒன்று கடந்த ஆண்டு  செயல்படுத்தப்பட்டது. அதன்படி நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் 5 … Read more

மனிதாபிமானமில்லாத கண்டக்டர்; மூளைவளர்ச்சியற்ற மகனை ஒன்றரை கி.மீ., தூக்கி வந்து மனு அளித்த தந்தை

கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சியற்ற, 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ, மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்போது அவரை பஸ் கண்டக்டர்‘ பஸ் கலெக்டர் … Read more

“பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பிரசவம் ஆன எனது மகள் மரணம்” – தாய் அதிர்ச்சி புகார்

பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே பிரசவம் நடந்த தனது மகள் உயிரிழந்ததாகவும், உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி தாய் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகள் கனிமொழிக்கு கடந்த 2012-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் மீண்டும் கருவுற்ற நிலையில் தேனி, ராஜதானி … Read more

டாக் ஓனர் முகம் தெரிகிறதா? 15 செகண்டில் கண்டுபிடிச்சா உங்க ஐ.க்யூ அதிகம்!

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இதை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. கீழே உள்ள தந்திரமான புதிர் படம் 1880களில் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஓவியத்தில் நீங்கள் பார்ப்பது வெறும் நாய் மட்டும் அல்ல, இதில், நாய் உரிமையாளரின் முகமும் மறைந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான … Read more

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000… அறிவிப்பை வெளியிடுங்கள்” – புதுச்சேரியை முன்வைத்து வலியுறுத்தும் அன்புமணி

சென்னை: திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

நானும் மதுரைக்காரந்தேன்: பரபரக்கும் பிடிஆர்..!

தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டபோதே, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவர் பேசுபொருளானார். பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த அனுபவம் காரணமாக கட்சியில் சீனியர்கள் பலர் இருந்தபோதும், பிடிஆருக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலினை பலரும் பலரும் பாராட்டினர். அதற்கு ஏற்றாற்போல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால், ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன் பாஜக மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான … Read more

ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆவேசம்

முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் வேகத்தில் புகழேந்தி பேசியதில் காரசாரமான வரிகளை கவனித்துவிட்டு பின்னர் செய்திக்குச் செல்லலாம்.! ‘எடப்பாடி எப்போதும் மன்னன் மகுடம் சூட்ட முடியாது’ ‘ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி’ ‘இதுவரை இந்தியாவில் ஊழல் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த ஊழல்தான். அவரது ஆட்சியில் மிகப்பெரிய ஊழல்’  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓ.பி.எஸ்ஸின் … Read more

ஏலகிரி மலையில் சாலையை மறைக்கும் செடிகளால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஏலகிரி : ஏலகிரி மலையில் நிலாவூர் செல்லும் சாலையோரங்களில்  வளைவு பகுதியில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏலகிரி மலையில் சுமார் 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி  ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.14 கிராமத்திற்கும்  சாலை வசதிகள் உள்ளன. மேலும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் பணிகளை மேற்கொண்டு … Read more

”எங்கள் நிலத்தை ஏமாற்றிவிட்டார்கள்”..ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி

ஈரோடு அருகே கடனுக்கு பெற்ற நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கொங்கர்பாளையத்தில் சுந்தரம்-பாப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 82 செண்ட் விவசாய நிலத்தை 2008ஆம் ஆண்டு பாலு என்பவரிடம் அடகு வைத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். இதற்கு 2019ஆம் ஆண்டு 60 ஆயிரத்துடன் 2 … Read more

ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

புதுச்சேரி: அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. பேரவைத்தலைவர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்னிலைப்படுத்துவார் என பேரவைத் தலைவர் … Read more