‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை’.. இறப்புக்கு காரணம் என்ன? – எய்ம்ஸ் குழு விரிவான அறிக்கை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் அங்கு சிகிச்சையில் இருந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு … Read more

அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு – அரசின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்டது

சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம … Read more

பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி – பாஜக மேலிடம் செம ஷாக்!

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என, அடிக்கடி தெரிவித்து வருவது, டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, , வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார். அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமியும் அவருடைய மனைவி முத்துமாரியும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கம்பு, கற்களால் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.  இதில் பலத்த காயமடைந்த … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: தமிழக கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர்: தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவ … Read more

தொடங்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு..!முதல் நாளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள்.!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நாளான நேற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த விளையாட்டு வீரர்கள், … Read more

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்ய திட்டம்

சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு 2,400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், பசுமையை காத்தல்,பாதுகாப்பான மின் ஆற்றலை பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பம் முதலே ஊக்கம் அளித்து வருகிறது. … Read more

‘ரூபாய் நோட்டுல வாழுறாரு காந்தி’… பாஜக அடுத்த ப்ளான்?

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையையும் முன்னெடுத்தது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக … Read more

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’மேஜிக் சூப்’ ரெசிபி

ஒவ்வொருவரும் தங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்ப்பதன் மூலமும் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி ஒரே நாளில் வராது, அதற்கு ஆரோக்கியமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவதுடன் பல வாழ்க்கை முறை பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இங்கு உங்கள் இம்யூனிட்டியை அதிகரிக்க ஒரு சூப்பர் சூப் ரெசிபி உள்ளது. இதற்கு தக்காளி, பீட்ரூட் மட்டும் போதும். தேவையான பொருட்கள் 1½ – பீட்ரூட் (உரித்து, வேகவைத்து … Read more