ஓ.பன்னீர்செல்வம் தூண்டிலில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி – ர.ர.,க்கள் கப்சிப்!

தரப்பில் இருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, , வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார். அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 … Read more

சேலத்திற்கு ஆர்ப்பாட்டமாக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி! மெளனம் கலையுமா?

சேலம்: அதிமுகவில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புகளுக்கு இடையே, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது, கழகப் பொதுச் செயலாளர் அம்மாவின் அரசியல் வாரிசு எடப்பாடியார் என தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினார்கள். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் வகித்து வந்த இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் தானாகவே காலாவதியான நிலையில், … Read more

ரயில் நிலைய கவுன்டர்களின் பயன்பாடுகள் குறைகின்றன: தெற்கு ரயில்வேயில் 80% டிக்கெட் ஆன்லைனில் விற்பனை

நெல்லை: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவில் சில பகுதிகளும் தென்னக ரயில்வே எல்கையில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழகத்திலும், கேரளாவிலும் படித்தவர்கள் அதிக சதவீதத்தில் உள்ளதால் இந்த 2 மாநிலங்களிலும் 80 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, தெற்கு ரயில்வேயில் 2018ம் ஆண்டில் 26 முதல் 28% … Read more

போதை மாத்திரை தர மறுத்த மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து : 3 இளைஞர்கள் தப்பி ஓட்டம்

கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்து கடை உரிமையாளரை 3 இளைஞர்கள் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மோகன் குமார் என்பவர் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று இரவு ஆட்டோவில் வந்த மூன்று இளைஞர்கள் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர். அதற்கு மோகன் குமார் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க … Read more

நீலகிரி, கோவையில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 21, 22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 23, 24-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான … Read more

டெல்லி க்ரீன் சிக்னல் – வெளிநாடு பறக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு உடனே சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த தினத்தன்று, டெல்லியில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் மு.க.ஸ்டாலினும், மோடியும் ஒன்றாக நிற்கும் படத்தைப் போட்டு, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்ததற்கு பிரதமருக்கு நன்றி’ என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது டெல்லி அரசியல் … Read more

விடுதலைப்போராட்ட வீரர்: ஒண்டிவீரன் அஞ்சல் தலை கவர்னர்கள் வெளியீடு

நெல்லை: விடுதலைப் போராட்ட வீரர்  ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா, பாளை. கேடிசி நகரில் நேற்று  நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலங்கானா கவர்னர் தமிழிசை ஆகியோர் ஒண்டிவீரன் அஞ்சல் தலையை வெளியிட,  முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோவிந்தராஜ், ஒண்டிவீரன் வாரிசு ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக் கொண்டார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழகத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை வளர்ந்துள்ளது. அகில இந்திய … Read more

சேலையூர் : வாகன சோதனையில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் 7 முக்கிய குற்றவாளிகள் கைது.!

சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் செய்யப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா பொட்டலம், கத்தி, நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியுடன் வந்த குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அருகே சேலையூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த ஏழு பேர் போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதனை … Read more