சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “தமிழக முதல்வரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை … Read more

புதிய கொலை வழக்கில் எடப்பாடி?; பகீர் தகவலால் பரபரப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் 100வது நாளான மே 22ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, திடீரென அங்கு கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி 2 பெண் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் … Read more

அந்த மனசு தான் சார் கடவுள் – பசியால் திருடிய நபருக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்த நெகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். அவரது கடைக்கு வெளியே பழைய இரும்பு பொருட்களை கொட்டி கிடப்பது வழக்கம். இரவு நேரத்தில் அதை நோட்டமிட்ட நபர் ஒருவர், இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளார். அதைக் கண்டு, அந்த கடையில் பணி புரியும் செக்யூரிட்டி ஒருவர் அவரை பின்தொடர்ந்து, அவரிடம் இருந்து அந்த இரும்பு பொருட்களை மீட்டிருக்கிறார். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு திருடிச்சென்ற இரும்பு கம்பிகளுடன் கேட்டரிங் … Read more

நத்தம் பகுதியில் சீனி முருங்கை விளைச்சல் அமோகம்: உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை, கருத்தநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, நல்லபிச்சம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி ஆகிய கிராமப்பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதிகளாகும். இப்பகுதிகள் மானாவாரி நிலங்களாகவும், கற்கள் அதிகம் கொண்ட நிலப்பகுதியாகவும் முன்பு இருந்தது. நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, விளைநிலங்களில் பரவி கிடந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்ய ஏற்ற பூமியாக விவசாயிகள் மாற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து, இப்பகுதியில் கத்தரி, தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய், போன்ற காய்கறி … Read more

கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுது – அரை மணி நேரமாக தவித்த 10 பேர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய 10 பேரை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் லிப்ட் கதவுகளை உடைத்து மீட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் இரண்டாவது மாடியில் இருந்து … Read more

கேன் குடிநீர் விநியோகிக்கும் முன் அறிக்கை வெளியிட வேண்டும்: உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

Chennai Tamil News: கேன்களில் விநியோகிக்கும் தண்ணீரின் சுகாதாரத்தைக் குறித்து அறிக்கை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கேன்களில் குடிநீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், காலாவதியின் குறிப்பிடுகள், பிளாஸ்டிக்கை மறுசுழச்சிற்கும் முறை ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | நடவடிக்கைக்குப் பின் பேரவையில் அருணா ஜெகதீசன் ஆணைய இறுதி அறிக்கை – அரசு விளக்கம்

சென்னை: “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் … Read more

ரமணா திரைப்பட பாணியில் மோசடி: மருத்துவரின் பதிவு நீக்கம் செல்லும் – உயர் நீதிமன்றம்!

சிகிச்சையில் இருந்த நோயாளியை நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய புகாருக்கு உள்ளான மருத்துவரின் பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 2015ம் ஆண்டு செப்டம்பர் 27இல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர், தீவிர சிகிச்சை பலனளிக்காததால், அக்டோபர் 11இல் இறந்துள்ளார். இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி தனது சகோதரரின் மாமனாரான கோவையை … Read more

சூரிய ஒளி மூலம் மூன்று சக்கர வாகனத்தை இயக்கி கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வியாபாரி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சூரிய ஒளி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தில் சென்று பொருட்களை வியாபாரி விற்பனை செய்து வருகிறார். கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (42). பல்பு, பத்தி, சாம்பிராணி, மாவு வகைகள் உள்ளிட்ட பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து வியாபாரம் செய்கிறார். இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு சென்று சப்ளை செய்து வந்த இவர், பெட்ரோலுக்கு தினமும் ரூ.100 முதல் 200 வரை செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் … Read more

இளைஞர் தற்கொலை – காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் பி.இ பட்டதாரி இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த எஸ். கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென வீட்டில் யாரும் இல்லாதபோது, இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் … Read more