தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்: நடை பயணம் கிளம்பிய அன்புமணி

தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்காக காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த சுமார் 800 கோடி ரூபாய் மட்டும் தான் தேவைப்படும். திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைவர் 3 நாட்களுக்கு பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கல்லில் உள்ள … Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகள் அகற்றம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகள் அகற்றப்படும். சென்னையில் இந்த பணி தொடங்கி உள்ளதாக அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக, சென்னையில் மதுக்கடை அகற்றும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த  நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக … Read more

டைரி எழுதவில்லை என மாணவனை தலையில் அடித்த ஆசிரியர் – சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட வீர கோயிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் … Read more

தர்மபுரி || இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். தர்மபுரி மாவட்டம் நல்லூர் காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி ராணி (60). இவர் நேற்று மகன் செந்தில்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மிளகு நாற்று வாங்குவதற்காக பொன்னகரத்திற்கு சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து மூங்கில்மடுகு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ராணி இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராணியை மீட்டு சிகிச்சைக்காக பொன்னகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

வீடுகளை, நிலங்களை கொடுத்த கிராம மக்களுக்கு என்எல்சி செய்தது என்ன? – விவசாயிகள் சரமாரி கேள்வி

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நெய்வேலி வட்டம் -11 லிக்னைட் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வாணதிராயபுரம்,வடக்கு வெள்ளூர், கரிவெட்டி, கத்தாழை, வளையாமதேவி உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், “என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த காலங்களில் தங்கள் நிலங்களை கையகப்படுத்தும் போது வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இதுவரை வழங்கவில்லை. … Read more

எங்கே அந்த சமூக விரோதிகள்? உயிரை துளைத்த அதிகாரம்… மூச்சை நிறுத்திய தூத்துக்குடி!

“அழிக்கும் நச்சு ஆலை… நம் மண்ணை விட்டு ஓடும் நாளை…, மானமிகு தமிழனே! வீதிக்கு வந்து போராடு… முத்து குழிக்கும் நகரா? சாவு குவியும் நகரா..? புற்றுநோய், புற்றுநோய் ஊரெங்கும் புற்றுநோய்… ஆலையை மூடி விடு, மக்களை வாழ விடு… அறவழியில் மக்கள்… திமிரோடு ஆலை… துணைபோகும் அதிகாரம்…” மே 22, 2018 அன்று மேற்குறிப்பிட்ட பதாகைகளை ஏந்தி, தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழக்கமாக ஒலிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தை தூத்துக்குடி … Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி

சேலம்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஈட்டியம்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வேலு (34), முதல்நிலை காவலர். இவர், சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வருகிறார். தனது மனைவி பார்வதி மற்றும் 3 மகன்களுடன் கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் போலீஸ்காரர் வேலுவிற்கு மஞ்சள்காமாலை நோய் வந்துள்ளது. இதனால், மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு, சொந்த ஊரான தர்மபுரி அரூருக்கு வந்துள்ளார். பின்னர் வேலு, … Read more

’எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு செய்ததற்கான ஆதாரம் இருக்கிறது’ – அறப்போர் இயக்கம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் இருந்தபோது தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை மற்றும் லஞ்ச … Read more

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை வெளியிடுக: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18ந் தேதி தமிழக முதலமைச்சரிடம் … Read more

முதல்வரை விமர்சிக்கும் அரசு ஊழியர்களிடம் பணித்திறனை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா?

இனிப்பான செய்தி: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கடந்த திங்கள்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்புமிக்க இந்த தினத்தில் சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுதாக அப்போது அறிவித்தார். அதாவது 31% ஆக இருக்கும் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படுவதாகவும், இது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானது என்றும் … Read more