ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ரசாயன கலவைக்கு தடைவிதிப்பால் பொள்ளாச்சி பகுதியில் களிமண் சிலை வடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், இப்பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், வடக்கிபாளையம், ஆர்.பொன்னாபுரம், கோபாலபுரம், ஆவல் சின்னாம்பாளையம், அங்கலகுறிச்சி, கோட்டூர், … Read more