வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது

வேலூர்: வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வருவதற்குள் முட்புதார்கள் சூழ்ந்து காடு போல மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது. இங்கிருந்து சரக்குகளை கையாளவும், பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டெர்மினல் பில்டிங், … Read more

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழக நிதியமைச்சர் நிரூபிக்க தயாரா? – சீமான் கேள்வி

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிரூபிப்பாரா என்று நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழக நிதியமைச்சர் நிரூபிப்பாரா என கேள்வி எழுப்பினார். இலவசம் என்பது ஒருவகை லஞ்சம்தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவில் நகைச்சுவை நாடகம் நடப்பதாகவும், … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் மேல்முறையீடு; ஓ.பி.எஸ் கேவியட் மனு

ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தங்களது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்து களேபரம் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை, முதலில் விசாரித்த சென்னை உயர் … Read more

சாலையின் நடுவே மின்கம்பங்கள்., தமிழகத்தில் தொடரும் அவலம்.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கை-பம்பப்படையூர் மற்றும் தென்னூர்-பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் இருந்த 8 மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலை விரிவாக்க பணி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இப்பகுதியில் போக்குவரத்து அலுவலகம் உள்ளதால், நாள்தோறும் இச்சாலை வழியே நூற்றுக்கணக்கானோர் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் முன்னரே சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை சாலை ஓரம் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | “நெல்லை என்ற சொல்லுக்கு தமிழகம் முழுவதும் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்” – வைகோ 

திருநெல்வேலி: எழுத்தாளர், இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லைக் கண்ணன் மறைவையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியில் உள்ள நெல்லை கண்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழால் புகழ்பெற்ற நெல்லைக்கு, நெல்லையப்பர் ஆலயத்தால் புகழ்பெற்ற நெல்லைக்கு, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கின்ற நெல்லைக்கு, சமயச் சொற்பொழிவு ஆற்றுவதிலும், இலக்கியச் சொற்பொழிவு ஆற்றுவதிலும் ஈடு இணையற்ற தீரராகத் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன். நெல்லை என்று சொன்னாலே கண்ணனையும் சேர்த்துச் சொல்லுகின்ற அளவுக்கு … Read more

எந்த காலத்திலும் அது நடக்காது… திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை!

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கையில், பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு குறைந்தபட்ச தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது. ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். இந்த மூன்றுமே இல்லாத … Read more

பவாரியா கொள்ளையர்கள் போன்று கொடூரமாக வதம் செய்து கொள்ளையடிக்கும் கும்பல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி. 82 வயதான அவர் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து தனிமையில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று விடிந்து, நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சரோஜினியின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது பேரதிர்ச்சி… வாய் மற்றும் கை கால்கள் பிளாஸ்டிரியால் சுற்றி, மூச்சடைத்து கொல்லப்பட்டு கிடந்தார், சரோஜினி. அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த … Read more

தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு

நாகர்கோவில்: தோவாளை தாழக்குடி சாலை ரூ.3.28 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் ரூ.3.87 கோடியில் முப்பாற்று ஓடை குறுக்கே பாலமும் கட்டப்பட உள்ளது. தோவாளை தாழக்குடி சாலையில் லாயம் வரை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாலை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மேம்பாடுத்தப்படுகிறது. இதற்காக ரூ.3.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த சாலையின் குறுக்கே 8 சிறிய பாலம், … Read more

நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கீடு.. சான்றுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதிக்கீடு செய்ததோடு, வங்கி கடன்கள் வழங்குவதற்கான சான்றுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும், நரிக்குறவ சமுதாய மக்களுக்கு கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதில் நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் என மொத்தம் 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும், 12 பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தலா … Read more

சென்னை நகரத்தின் அதிசியம் பாடிகார்ட் முனீஸ்வரன் – பெயர் காரணம் தெரியுமா? 

சென்னை நகரத்தின் அதிசியம் பாடிகார்ட் முனீஸ்வரன் – பெயர் காரணம் தெரியுமா?  Source link