உக்கடத்தில் புதைவிட மின்சார கேபிள் அமைக்கு பணி நிறைவு

கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றன. இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக செல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலை உருவானது. இதை அடுத்து உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் … Read more

ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும்: ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுநர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் … Read more

ஆர்டர்லி முறை ஒழிப்பு: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்ற காவலர் சென்னையில் வேறு இடத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், காவல்துறையில் நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த … Read more

இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த ஊருக்கு புறப்படுவதற்கு முன்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்களால்,  தொண்டர்களுக்காக உருவாக்கினார். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை, அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. எம்ஜிஆர் மறையும்போது இருந்த 17 லட்சம் உறுப்பினர்களை, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தார். கழகம் ஒன்றுபட்டு ஜனநாயக … Read more

பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடம் அசல் சான்றிதழ்களை பெற்று மோசடி செய்த நபர் கைது

கோவை: பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடம் அசல் சான்றிதழ்களை பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார் புகாரில் கல்வி அறக்கட்டளை நடத்திவரும் செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வரத்து அதிகம் விலை குறைவு – கொழி சாளை மீன்களை வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்

குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் மலை போல் குவிந்த ‘கொழி சாளை’ மீன்கள் 1 கிலோ கொழி சாளை மீன் ரூ 20-க்கு விலை போன நிலையில் மீன்களை கேரளா வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி … Read more

தங்கம், வெள்ளி அதிரடி சரிவு.. வாங்கலாம் மக்களே..!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4838 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38704க்கு விற்கப்படுகிறது. நேற்று கிராம் தங்கம் ரூ.4849 எனவும் சவரன் ரூ.38792 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 ஆகவும் சவரனுக்கு ரூ.88 ஆகவும் குறைந்துள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கம் கிராம் ரூ.5240 ஆகவும் சவரன் ரூ.41920 ஆகவும் உள்ளது. டெல்லி நிலவரம்டெல்லியை பொறுத்தவரை 10 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.52393 ஆகவும் வெள்ளி விலை கிலோ ரூ.58213 … Read more

பழனிசாமியும் செய்யல, ஸ்டாலினும் செய்யல – தொடங்கியது அன்புமணியின் புதிய பயணம்! 

தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை முதல்  3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம் செல்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் அம்மாவட்டத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை; குடிக்கவும் நீர் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது … Read more

அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அதிமுகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அக்கட்சி நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இக்கட்சி எப்போதும்போல பலத்துடன் திகழ வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசத்துக்குக் கூட … Read more

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே … Read more