சாதகமான தீர்ப்புதான்!ஆனாலும் ஓபிஎஸ்-க்கு சிக்கல் இருக்கிறது! – தீர்ப்பின் முழு விவரம் இதோ!

“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. இந்த காரணத்திற்காகவே அந்த பொதுக்குழு செல்லாததாகி விடுகிறது” என்று இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுக இடைக்கால … Read more

டெல்லியில் மோடியுடன் சந்திப்பு: ஸ்டாலின் கொடுத்த தமிழக மரபு தானியங்கள் எவை?

டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது, அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கியுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வித்தியாசமாக, தமிழகதின் மரபு தானியங்களின் தொகுப்பு பெட்டகத்தை அளித்திருப்பது … Read more

'இது இந்துக்கள் வாழும் பகுதி' கோவையில் சர்ச்சையை ஏற்படுத்திய போர்டு.!

மதப்பிரச்சாரங்கள் செய்ய எங்கள் கிராமத்தில் அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் இந்துக்கள் வாழும் குடும்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக கோவை மாவட்ட பகுதிகளில் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் நிறைய பேர் பேனர்கள் வைத்து சுவரொட்டிகள் அடித்து தங்களது இந்து மத உணர்வை வெளிப்படுத்தி இருப்பதை மாவட்டம் முழுவதும் காண முடியும். அந்த … Read more

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

துபாயில் தவித்த கடலூர் இளைஞரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது போல நாடகமாடிய கும்பல் ஒன்று அவருக்கு தெரியாமல் சாக்லேட் பெட்டிக்குள் தங்க கட்டிகளை மறைத்து கொடுத்தனுப்பிய நிலையில், தங்கத்துடன் தலைமறைவான உஷார் குருவியை கார் போட்டு தேடிய கடத்தல் கும்பல் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெட்டி கிடைத்த நிலையில் தங்க கட்டிகள் மாயமான சம்பவத்தின் கண்ணாமூச்சி ஆட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தே.புடையூர் கிராமத்தை … Read more

“அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” – ஓபிஎஸ்

சென்னை: “அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுக் கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மத்தை … Read more

ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் ஆப்பு..! முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை..!

ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். ஆன்லைன் ரம்மி ஆப்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பல்வேறு மக்கள் அவதிக்கு உல்லாகும் சூழல் உருவாகி உள்ளது. சிலர் ரம்மி ஆப்களில் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் உருவாகியுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வேண்டும் … Read more

செங்குட்டை பகுதியில் கண்டறியப்பட்ட காயம்பட்ட ஒற்றை யானை.. மீட்பு பணியில் வனத்துறையினர்!

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க டிரோன் பறக்க விட்டு தேடிவந்த வனத்துறையினர், செங்குட்டை பகுதியில் யானை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கோவை அருகே உடல் நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை தர மூன்று கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும், யானைக்கு சத்து மாத்திரை, வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை அளிக்க தயார் நிலையில், இருந்த போது யானை காட்டிற்குள் சென்றதால் யானையை டிரோன் உதவியுடன் 11 குழுக்கள் அமைத்து வனத்துறை அதிகாரிகள் … Read more

செம்ம… இலவசமாக உங்க வீட்டுக்கு தேடி வரும் வங்கி சேவை; எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பு

கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீடு தேடிவரும் இலவச வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை பெற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடு கொண்டவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி கிளைக்கு உள்பட்ட 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வசதி மாதத்துக்கு மூன்று முறை வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த வசதியை பெற எஸ்பிஐயின் யோனோ செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.இல்லையென்றால் பாரத் ஸ்டேட் வங்கியின் பதிவு … Read more

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த 9 வகை தானியங்கள்

சென்னை: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் ‘தமிழ்நாட்டின் தானியங்கள்’ என்ற பெயரில் 9 வகையான தானியங்களை நினைவுப் பரிசாக அளித்தார். சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்பின்னர், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய … Read more

ஆளுநர் ஆகும் ரஜினி?; பாஜக போடும் பலே கணக்கு!

சூப்பர் ஸ்டாரு… யாருன்னு கேட்டா… சின்ன குழந்தையும் சொல்லும்… என்கிற பாடல் வரிகளே சாட்சியம் சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி உச்சத்தில் இருந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும், லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களில் ரஜினி காட்டிய ஸ்டைல் மற்றும் அபார நடிப்பு மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. நாளுக்குநாள் புகழும், ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நான் … Read more