அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் – நெகிழ வைக்கும் ஊராட்சி தலைவர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு … Read more

ஊத்தங்கரை வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது

ஊத்தங்கரை: வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாம்பாறு அணை கிருஷ்ணன் கோயில் அருகே ரோந்து பணியில் காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் மேற்கொண்டுள்ளார். அப்போது முட்புதர் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் 4 பேர் மறைந்திருப்பதை கண்ட எஸ்.ஐ. குட்டியப்பன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஏதாவது ஒரு வங்கியில் கொள்ளையடிக்க வெல்டிங் மிஷினுடன் 5 பேர் வந்தது தெரியவந்துள்ளது.

இருள் நகரமாக மாறிய தூங்கா நகரம் மதுரை! அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டுவது ஏன்?

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தூங்காநகரம் என அழைக்கப்படும் மதுரை மாநகரில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. 100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 55,500 தெருவிளக்குகள் உள்ளன. கடந்த காலத்தில் தெரு விளக்குகள் அனைத்தும் டியூப் லைட், சிஎஃப்எல் மற்றும் சோடியம் விளக்குகளாக மட்டுமே இருந்தன. இந்த விளக்குகளை எரிய வைப்பதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டதால் தெருவிளக்குகளுக்காக மட்டும் மாநகராட்சி நிர்வாகம், மின்கட்டணமாக 1 கோடி வரை செலுத்தி வந்தது. இந்நிலையில் நிதியிழப்பை கருத்தில் கொண்டு … Read more

10 ஆண்டுகள் நிறைவு.. பிரியங்காவை கண்ணீரில் மூழ்கடித்த விஜய் டிவி

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியாக இருக்கும் பிரியங்கா சின்னத்திரைக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அவருக்கு நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் இணைந்து கிஃப்ட் கொடுத்துள்ளனர்.    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் பிரியங்கா. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் இவர், விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து … Read more

பழனி முருகன் கோயில் அபிஷேக கட்டண உரிமை விவகாரம்: குருக்கள் சங்க மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை: பழனி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணத்தில் திருமஞ்சனத்துக்காக ஒதுக்கப்படும் கட்டணத்திற்கு உரிமை கோரி குருக்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமஞ்சனக் கட்டணத்தை பண்டாரங்களிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பழனி முருகன் கோயில் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு: பழனி முருகன் கோயிலில் 1970-ல் அபிஷேகத்துக்கு ரூ.9.40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்தில் ரூ.6.40 … Read more

'கபட நாடகமாடும் செந்தில் பாலாஜி' – போட்டு தாக்கிய அண்ணாமலை

“மின் கட்டணம் உயர்வு குறித்து மக்களிடையே கருத்து கேட்டு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கபட நாடகம் ஆடுகிறார்” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் இன்று, செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது: பாஜக கொள்கை ஏற்று யார் வந்தாலும் முழு அனுமதி உண்டு. பாஜகவை பொறுத்தவரை குறுகிய மனப்பான்மையுடன் இருக்கும். நம்மிடம் இருந்து சென்று விட்டார்; திரும்பி வரும் போது ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற எண்ணம் … Read more

வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் – அண்ணாமலை

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அதன் தலைவருமான அர்ஜுன மூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இன்று இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய … Read more

சொத்துப் பிரச்சனையில் மாற்றுத்திறனாளிகள் கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு

கிருஷ்ணகிரி: தளி அருகே முதல் கணவரின் மகள், மகணை கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் வெங்கடலட்சுமி, சுரேஷ், கோபால்,சாந்தி, நவீன் ஆகியோருக்கு  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சொத்துப் பிரச்சனையில் மாற்றுத்திறனாளிகள் மஞ்சு,முத்தப்பாவை கொன்ற வழக்கில் ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழக்கப்பட்டது.

கோவில்பட்டி: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை! முன் விரோதம் காரணமா என விசாரணை

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் விவசாய வேலைக்காக சென்ற பொன்ராஜ் தனது தொழுவில் அமர்ந்து இருக்கும் போது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் உயிரிழந்தார். … Read more

மாடர்ன் லவ் சென்னை, தி வில்லேஜ்… வரிசைகட்டும் தமிழ் வெப் சீரிஸ்கள்

கொரோனா காலகட்டத்தில், வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது ஒடிடி தளங்கள். அப்போது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்து தியேட்டர்கள் திறந்துவிட்டாலும், ஒடிடி தளத்திற்கு உண்டான மோகம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் முன்னணி நடிகர்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை விட ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் … Read more